தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள்
தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள். மகேந்திரவர்மன். மகேந்திரவர்மனனுடைய தந்தையான சிம்மவிஷ்ணு காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் நாட்டை அரசாண்டார். சிம்மவிஷ்ணு ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது அவருடைய பல்லவராட்சி ஆந்திர நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு சிம்ம விஷ்ணு சோழ நாட்டை வென்று தமது பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார் .இச்செய்தி வேலூர்பாளையம் காசாகுடி செப்பேட்டு சாசனங்களினாலே தெரிகிறது. "நெல் வயல் களையும் சமூக நிலைகளையும் தனக்கு நகைகளாக பூண்டு விளங்குகின்ற கவீரனுடைய மகளினால் (காவிரிஆற்றினால்) பொலிகின்ற சோழர்களின் சோழநாட்டை சிம்மவிஷ்ணு விரைவில் கைப்பற்றினான்" என்று வேலூர்பாளையம் சாசனத்தின் பத்தாவது வடமொழிச் செய்யுள் கூறுகிறது. பிறகு அவனி சிம்மன் ஆகிய சிம்மவிஷ்ணு அரசாட்சிக்கு வந்தான். அவன் தன் பகைவர்களை ஒழிக்கக்கருதி மலய மாளவ சோழ பாண்டிய அரசர்களையும் தன் கை வன்மையினால் தருக்கியிருந்த சிங்கள அரசனையும் கேரளனையும் வென்றான். இன்று பாஷா பிடிக்கப்பட்டு சாசனம் இருபதாவது செய்யுளில் கூறுகிறது. இவ்வாறு சிம்மவிஷ்ணு காலத்தில் ...