விஜயநகர பேரரசு வரலாற்று வடமொழி தெலுங்கு நூல்கள்
வடமொழி, தெலுங்கு நூல்கள் 1.கங்கா தாசப் பிரதாப விலாசம்: கங்காதரன் என்பவரால் இயற்றப்பட்ட வடமொழி நாடகத்தின் முகவுரையில் இரண்டாம் தேவராயர் உடைய மகனாகிய மல்லிகார்ஜுனர், பாமினி சுல்தானும் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தபோது, அவர்களை எதிர்த்து நின்று எவ்விதம் வெற்றி பெற்றார் என்பது பற்றி விரிவாகக் கூறப்படுகிறது இந்த நூலில். 2.அச்சுதராயர் அப்யூதயம்: இந்த வடமொழி நூல் ராஜநாத திண்டிமன் III என்ற ஆசிரியரால் இயற்றப் பெற்றது ஆகும். இந்த நூலில் துளுவ வம்சத்து தலைவனாகிய நரச நாயக்கருடைய வரலாறும், அவருடைய மக்கள் வீர நரசிம்மன் கிருஷ்ண தேவராயர் அச்சுதராயர் முதலிய அரசர்களுடைய பிறப்பு, வளர்ப்பும் போன்றவைகளோடு, அச்சுத தேவராயர் பற்றியும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. இவரின் ஆட்சி பெருமை முழுவதும் உணர்ந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும். சோழநாட்டிலும், மைசூர் நாட்டிலும், அச்சுத தேவராயர் அடைந்த வெற்றிகளையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 3.வரதாம்பிகா பரிணயம்: இவ் வடமொழி நூல் உரை நடையிட்ட செய்யுள் வகையான சம்பு காவியமாக திருமலாம்பாள் என்ற ஆசிரியை எழுதப்பட்டதாகும். துளுவ வம்சத்து நரச...