தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள்

தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள்.

மகேந்திரவர்மன்.

மகேந்திரவர்மனனுடைய தந்தையான சிம்மவிஷ்ணு காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் நாட்டை அரசாண்டார்.  சிம்மவிஷ்ணு ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது அவருடைய பல்லவராட்சி ஆந்திர நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு சிம்ம விஷ்ணு சோழ நாட்டை வென்று தமது பல்லவ ராஜ்யத்துடன்  சேர்த்துக்கொண்டார் .இச்செய்தி வேலூர்பாளையம் காசாகுடி  செப்பேட்டு சாசனங்களினாலே  தெரிகிறது.

"நெல் வயல் களையும் சமூக நிலைகளையும் தனக்கு நகைகளாக பூண்டு விளங்குகின்ற கவீரனுடைய மகளினால் (காவிரிஆற்றினால்) பொலிகின்ற சோழர்களின் சோழநாட்டை சிம்மவிஷ்ணு விரைவில் கைப்பற்றினான்" என்று வேலூர்பாளையம் சாசனத்தின் பத்தாவது வடமொழிச் செய்யுள் கூறுகிறது.

பிறகு அவனி சிம்மன் ஆகிய சிம்மவிஷ்ணு அரசாட்சிக்கு வந்தான். அவன் தன் பகைவர்களை ஒழிக்கக்கருதி மலய  மாளவ சோழ பாண்டிய அரசர்களையும் தன் கை  வன்மையினால் தருக்கியிருந்த  சிங்கள அரசனையும் கேரளனையும் வென்றான். இன்று பாஷா பிடிக்கப்பட்டு சாசனம் இருபதாவது செய்யுளில் கூறுகிறது.

இவ்வாறு சிம்மவிஷ்ணு காலத்தில் பல்லவர் ஆட்சியும் வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவியிருந்தது அதாவது ஆந்திர தேசம், தொண்டை மண்டலம்;சோழ மண்டலம்; ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டிருந்தது.

சிம்ம விஷ்ணுவின் மகனாகிய மகேந்திரவர்மன் இளவரசனாக இருந்த போது ஆந்திர நாட்டில் தங்கியிருந்தான்.  தெலுங்கு நாட்டிலே குண்டூர் மாவட்டத்தில் சேஜர்லா  என்னுமிடத்திலுள்ள கபோதேசுரன் கோயில் சாசனம் ஒன்று, மகேந்திரவர்மன் கோயில் திருப்பணி செய்ததை கூறுகிற படியினாலே இளவரசனாக இருந்த போது இவன் தெலுங்கு நாட்டில் இருந்தான் என்பது நன்கு தெரிகிறது.

சிம்மவிஷ்ணு ஏறக்குறைய கிபி 600 இல் காலமானான்.  பிறகு அவன் மகனான மகேந்திரவர்மன் அரசனானான். மகேந்திரவர்மன் ஏறக்குறைய கிபி 600 முதல் 630 வரையில் அரசாண்டான்.

பல்லவ அரச குடும்பத்தில் மகேந்திரன் என்னும் பெயர் உடையவர்களில் இவன் முதல்வன். ஆகையினாலே சரித்திரத்தில் இவன் மகேந்திரவர்மன் முதலாமவன் என்று கூறப்படுகிறான்.

மகேந்திரவர்மன் தன் தலைநகரானகாஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டான் .மகேந்திரன் காலத்தில் பல்லவ ராஜ்யத்தின் வட எல்லை குறைந்துவிட்டது. எப்படி என்றால் வாதாபி( பாதாமி) என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சளுக்கிய அரசனாகிய இரண்டாம் புலிகேசி (இவன் கிபி 609 முதல் 642 வரையில் அரசாண்டவன்).

கிபி 610இல் பல்லவ  ராஜ்யத்தின் மேல் படை எடுத்து வந்து ஆந்திர தேசத்தை கைப்பற்றிக் கொண்டான். அல்லாமலும் பல்லவரின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேலும் படையெடுத்து வந்தான். ஆனால் மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டு அவனை முறியடித்துத் துரத்திவிட்டான்.

காசா குடி செப்புபட்டயம் மகேந்திரனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது.

"அதன்பிறகு மகேந்திரனுடைய புகழைப் போன்று புகழ் படைத்தவனும் ஆணையை செலுத்துபவனும் புள்ளளூரில் தன் பகைவரைப் புறங்கண்டவனுமான மகேந்திரவர்மன் என்னும்
 அரசன் மண் உலகத்தை அரசாண்டான்"

மகேந்திரன் வென்ற அரசன் யார்? என்று இந்தப் பட்டயம் கூறவில்லை.  ஆனால் இரண்டாம் புலிகேசியை தான் இந்த சாசனம் குறிப்பிடுகிறது என்று தெரிகிறது . ஏனென்றால் அய்ஹொலெ சாசனம் புலிகேசியை இவ்வாறு புகழ்கிறது.

"அவன் (புலிகேசி ),தன்னுடைய சேனையின் தூசியினால் தன்னை எதிர்த்த பல்லவ மன்னனுடைய ஆற்றலை மழுங்கச் செய்து அவனை காஞ்சிபுரத்தின் மதிலுக்குள்  மறையும் படி செய்தான்." (செய்யுள் 29) 

"பல்லவர்களின் சேனையாகிய குளிர்ந்த பனிக்கு கடும் கிரணமுள்ள சூரியனைப் போன்ற அவன் (புலிகேசி )சோழ பாண்டிய கேரளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்"  (செய்யுள் 31)

இந்த சாசனங்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து மகேந்திரவர்மனுடன் போர் செய்த சளுக்கிய  அரசன் இரண்டாம் புலிகேசி என்பது ஐயமற விளங்குகிறது.

மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர்செய்து வெற்றி கொண்ட இடமாகிய புள்ளலூர், செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 15 மைல் தூரத்தில் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு