நாயக்கர் கால சிற்பங்களில் கோலாட்டமும் கும்மியும் :
சிற்பங்களில் கோலாட்டமும் கும்மியும் : Source : Tamil Priyan/fb கோலாட்டம் ஒரு விளையாட்டு முறை கல்வியாகும், இது உடற் பயிற்சியும் மனப் பயிற்சியும் கலந்த ஒரு அற்புதமான கலை. இதன் மூலம் ஆடுவோர் மனதில் மகிழ்ச்சியும் உடலுக்கு பயிற்சி யும் ஊட்ட வல்லது. பண்டைய காலத்தில் மன்னர்களும் அரசவை கலைஞர்களும் இந்த கலைக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்துள்ளனர். பல ஆலயங்களில் கோலாட்ட சிற்பம் சுவர்களிலும் தூண்களிலும் புடைப்பு சிற்பமாக இன்றும் காணலாம் . வேலூர் கோட்டை கோயில் திருமண மண்டபத்திலும், வேலூர் அருகே உள்ள திருவலம், வில்வநாதேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள ஒரே கல்லில் குடையப் பட்ட கல்தொட்டியில் வெளிப்புறம் முழுவதும் பெண்கள் கோலாட்டம் ஆடுவது போல புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட காட்சி கோலாட்டம் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகிறது. கோலாட்டமும் கும்மியும் மகிழ்ச்சியின் வெளிப்பாடா கவும், உள்நாட்டு அல்லது பொது விழாவாகவும் ஒவ்வொரு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். விஜயநகரம் மற்றும் நாயக்கர்களின் காலத்தில் இந்தக் கலை வடிவங்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விஷயம். இன்று இவை ...