#விருப்பாட்சி_பாளையம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில் இருக்கிறது அந்த கிராமம். மிகப் பெரும் வீரம் செறிந்த ஒரு பெரும் வீர வரலாற்றை தன்னுள் அடக்கியபடி,அலைகள் இல்லாத நடுக்கடலின் நிசப்தம் போல் இன்றைக்கு இருக்கிறது அந்த கிராமம்.அதிகம் போனால் ஒரு ஆயிரம் வீடுகள் இந்த ஊரில் இன்றைய நிலையில் இருக்கலாம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சின்னஞ்சிறு கிராமம் தான்,சூரியன் எங்கள் நாட்டில் மறைவதே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பிரிட்டீஷ் சாம்ராஜ்யித்தின் கண்ணில் விழுந்த நெருப்புப் பொறியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடேங்கப்பா...என்று வியக்கிறீர்களா? அந்த கிராமத்தின் பெயர் "விருப்பாச்சி" அப்படி என்ன நடந்தது அந்த சின்னஞ்சிறு கிராமத்தில்? அவ்வளவு பலமான பிரிட்டிஷ் படைகளை எதிர்த்தவன் யார்? 25-6-1772 ல் காளையார் கோவிலில் நடந்த உக்கிரமான போரில்,தன் சிவகங்கைச் சீமையையும்,அரசனும் சிவகங்கைச் சீமையின் மன்னனான தன் கணவன் முத்து வடுக நாதனையும் ஒரு சேர இழந்த பின்,வாய்விட்டுக் கதறி அழக் கூட வழியின்றி,தன் அமைச்சர் தாண்டவராய பிள்ளையுடனும்,தளபதிகள் மருதுபாண்டியர்களுடனும்...