சதாசிவ ராயர் கால திருவண்ணமலை, தேவிகபுரம் கல்வெட்டு
சதாசிவ ராயர் கால திருவண்ணமலை, தேவிகபுரம் கல்வெட்டு ------------------------------------------------------- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தேவிகாபுரம் என்னும் ஊரில் பெரியநாயகி அம்மன் கோயில் எதிரில் அமைந்துள்ள தேரடி நிலையில் அடியில், ஒரு கற்பலகையில் வெட்டப்பட்ட கல்வெட்டு. சதாசிவ மகராயர், கி.பி. 1564 வீரப்ப நாயக்கரின் மகன் பாப்பு நாயன் என்பவன் பெரியநாயகி அம்மன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள புது மதிலில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள திட்டி வாசலுக்கு எதிரில் இருந்த பெரியமனைப் பகுதியை விற்று, திருமலா உடைய நாயனார்க்கு திருக்கண் சாத்தவும், இரண்டாம் நாள் திருவிழா கொண்டாடவும், மோப்பூர் விநாயகரை எழுந்தருளச் செய்யவும் செய்த ஏற்பதாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு: ஸ்ரீமந் மஹாமண்டலீஸ்வர ராஜாதிராஜ ராஜபரமேஸ்வரன் சதாசிவ தேவமகாராயர் ப்ரிதிவிராஜியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1486 மேல் செல்லா நின்ற ப்ரபவ சம்சவச்சரத் விருச்சிக நாயற்று பூர்வ பஷத்து பவுர்ணமியும் ரோஹிணி நட்சத்திரமும் பெற்ற ஆதித்த வாரத்து நாள் திருமலா உடைய தம்பிராநாற்கு திருக்கண் சாத்தவும் இரண்டாந் திருநாள் உபையத்துக்கு தென் புத...