"பாஞ்சை போர்முறை கிரேக்க போர்முறையை போன்று பழமையானது"-கர்னல் வெல்ஷ்-
பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள், சாகசங்கள், புகழ்ச்சிகள், குற்றச்சாட்டுகள், என்று பல நிலைகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் இருந்து நாம் தெரிந்து கொண்டாலும்,.... வீரம், சோகம், வெற்றி, இழப்பு, இவற்றை பற்றிதான் நாம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் பெருமையோடு பார்ப்பது. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் போர் முறைகளை பற்றிச் சொல்லும் போது *"கிரேக்கப் போர் முறையை போன்று பழமையானது"* என்று ஆங்கில அதிகாரி கர்னல் வெல்ஸ் என்பவர் குறிப்பிடுவதை தான், நான் பெருமையாகப் பார்க்கிறேன். உலக நாகரிங்களிலே மிகப் பழமையானது கிரேக்க நாகரீகம், ஆனால் இவர் பாஞ்சாலங்குறிச்சி போர் முறையை கிரேக்கப் போர் முறையோடு ஒப்பிடுகிறார். இதுதான் நாம் வியந்து பார்க்க வேண்டிய விஷயம். ஆங்கிலேயர்களோடு இந்தியா முழுவதும் நேருக்கு நேர் சண்டையை பல ராஜ்ஜியங்கள் நடத்தி இருக்கின்றன, அனைத்து ராஜ்ஜியங்களும் இறுதியில் தோல்விதான் அடைந்திருக்கின்றன, ஆனால் மற்ற ராஜ்ஜியங்களில் காணப்படாத அதிசயத்தை அடிபணியாத குணத்தை பாஞ்சாலங்குறிச்சியில் தான் ஆங்கிலேயர்கள் பார்க்கிறார்கள். ராணுவத்த...