களப்பிரர் வரலாறு
தொண்டை நாட்டில் களப்பிரர். களப்பிரர் யாவர்? களப்பிரர். களவர் என்னும் இப்பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும். பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப் பெரும். இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரசபடையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவர் ஆக பாண்டியர் பல்லவர் பட்டயங்கள் கூறுகின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடாமையின் இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி சின்னமனூர் பட்டயங்களில் 'கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்கு பின்னும் பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர்' என்பது காணப்படுகிறது. பெரியபுராணத்தில் மூர்த்தி நாயனார் காலத்தில் மதுரையில் வடுக கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டை கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே வேள்விக்குடி பட்டயம் குறிப்பிடும் சளி அரசனே பெரியபுராணம் கூறும் வடுக கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும். அஃதாவது அவனின் களப்பிர அரசன் ஆக இருத்தல் வேண்டும் என்பது கடைச் சங்கத்தின் இறுதி க...