பல்லவரும் தொண்டைநாடும்

பல்லவரும் தொண்டை நாடும்.

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்கு தென்பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவ மரபினர் சாதவாகனர் மாகாண தலைவராக இருந்து ஆண்டு வந்தனர்; தம் பேரரசு வழி கொண்ட தொடங்கிய கி.பி 225 தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்து கொண்டு விட்டனர். பின்னர் வலுப்பெற்றது ம், தொண்டை நாட்டை கைப்பற்ற முனைந்தனர்.

எனும் சாதவாகனப் பேரரசில் மாகாண தலைவராக இருந்த சாலங்காயனர், விஷ்ணுகுண்டர்,இக்கவாகர்,பிருகத்பாலயனர்,சூட்டுநாகர், பல்லவர் என்பவர், அப்  பேரரசு வலி குன்றத் தொடங்கியதும் தாம் தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்கு தாமே அரசர் ஆகிவிட்டனர்.

இதனால்தான் (சாதவாகனப் பேரரசு சத்ரபர் வாககாடகர் என்ற புதிய மரபினர் படையெடுப்பால் நிலை தளர்ந்தபோது தம் ஆட்சியை உள்ள உண்டாக்கிக் கொண்ட) இந்த அரசருள் பலர் கிபி 340 இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திர குப்தனை  எதிர்த்தனர் என்பதை அலகாபாத் தூண் கல்வெட்டு உணர்த்துகிறது.

சாதவாகனப் பேரரசு உடைபட்டு சிறிய பலநாடுகள் தோன்றியிராவிட்டால் ,சமுத்திரகுப்தனை (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி கிருஷ்ணா ஆறுகளண்டை எதிர்த் இருத்தல் இயலாத ன்றோ?.

இந்நிலைமை உண்டாவதற்கு முன்னரே இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத் தலைவர்) தங்கள் தென்  எல்லைப்புற போர்களில் சிறிதுசிறிதாக வெற்றி பெற்று வந்தனர்.

இறுதியில் சோழர் பிடித்த ஆண்ட தொண்டை மண்டலத்தில் வலிமையுள்ள அரசன் இல்லாத அக்காலத்தில் பெரும் படையை அனுப்பி பகைவரை விரட்டியடிக்க வழியற்ற சோழன் சோழ மண்டலத்தை ஆண்ட அக்காலத்தில் (வட எல்லையில் இருந்த) சாதவாகனப் பேரரசின் தென் பகுதியை சேர்ந்த அதிகாரிகள் பையப்பைய அருவா வடதலை நாட்டையும் பிறகு அருவா நாட்டையும் கைப்பற்றினர்

தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசு ராசனுக்கும் போர் நடந்தது என்னும் செய்தி மரபுச் செய்தி ஒன்று கர்னெல் மெக்கன்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசு ராசனோ தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை.  எனினும் இச் செய்தியை பல்லவரது தொண்டைமண்டல படையெடுப்பை குறிப்பது என்பதில் ஐயமில்லை.

இங்கனம் கைப்பற்றிய நாட்டில் மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்ப தேவன் என்னும் அரசன் ஒரு இலக்கம் (லட்சம் )கலப்பை களையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகின்றது.

பின்வந்த அரசரும் புதிய நாட்டில் இருந்த கோவில்களுக்கு மானியங்கள் விட்டனர் என்னும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. இச்செப்பேடுகளில் பிராகிருத மொழியேகாணப்படுகிறது. சாதவாகனப் பேரரசு ஆட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட செப்பேடுகளில் உள்ள பிராகிருத மொழியிலேயஇப்பட்டயங்களும் காணப்படுகின்றன.

எனவே இதுகாறும் கூறியவற்றால் சாதவாகனப் பேரரசில் தென்மாகாண தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கிபி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவா வடதலை நாட்டை முதற் கண் கைப்பற்றி உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைந்தனர்.

பிறகு சோழ வேந்தர் வலியற்ற நிலையை கண்டதும், அருவா நாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்து தலைநகரமாக இருந்த- கல்விக்கும் பல சமயங்களுக்கும் நிலைக்களமாக  இருந்த காஞ்சியை தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு  விளங்குதல் கூடும் அன்றோ?. இவர்களே தங்களை பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு