Posts

Showing posts with the label திருச்செந்தூர் முருகனும்

திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்

Image
திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன்  அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது. தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான். கட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம். கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்துவிட்டதை அவர்  தெரிந்து கொள்ளும விதமாக......... திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார். திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம். இதைத்தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும். இதற்க...