சதாசிவ ராயர் கால திருவண்ணமலை, தேவிகபுரம் கல்வெட்டு

சதாசிவ ராயர் கால திருவண்ணமலை, தேவிகபுரம் கல்வெட்டு
-------------------------------------------------------
திருவண்ணாமலை மாவட்டம்,
ஆரணி வட்டம், தேவிகாபுரம்
என்னும் ஊரில் பெரியநாயகி
அம்மன் கோயில் எதிரில்
அமைந்துள்ள தேரடி நிலையில்
அடியில், ஒரு கற்பலகையில்
வெட்டப்பட்ட கல்வெட்டு.
சதாசிவ மகராயர், கி.பி. 1564
வீரப்ப நாயக்கரின் மகன் பாப்பு
நாயன் என்பவன் பெரியநாயகி
அம்மன் கோயிலைச் சுற்றி
அமைந்துள்ள புது மதிலில்
தெற்குப் பக்கத்தில்
அமைந்துள்ள திட்டி
வாசலுக்கு எதிரில் இருந்த
பெரியமனைப் பகுதியை விற்று,
திருமலா உடைய நாயனார்க்கு
திருக்கண் சாத்தவும்,
இரண்டாம் நாள் திருவிழா
கொண்டாடவும், மோப்பூர்
விநாயகரை எழுந்தருளச்
செய்யவும் செய்த ஏற்பதாடுகள்
குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டு: 
ஸ்ரீமந் மஹாமண்டலீஸ்வர ராஜாதிராஜ ராஜபரமேஸ்வரன் சதாசிவ தேவமகாராயர் ப்ரிதிவிராஜியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1486 மேல் செல்லா நின்ற ப்ரபவ சம்சவச்சரத் விருச்சிக நாயற்று பூர்வ பஷத்து பவுர்ணமியும் ரோஹிணி நட்சத்திரமும் பெற்ற ஆதித்த வாரத்து நாள் திருமலா உடைய தம்பிராநாற்கு திருக்கண் சாத்தவும் இரண்டாந் திருநாள்
உபையத்துக்கு தென் புதுமதில் திட்டி வாசலுக்கு எதிர்மனை விளையாக கொண்டு மடமும்
மண்டபமுமரிக் ககட்டி மோப்பூர் விநாயகனையும் எழுந்தருளப் பண்ணி இந்த தலத்திலுள்ள பேற்கெல்லாம் புண்ணியமாக மோப்பூர் வீரப்ப நாயக்கர் புத்திரன்
பாப்பு நாயன் கட்டளை
பண்ணின தற்மம்
ஆதிந்தராதமாக நடக்கக் கடவதாகவும் இந்த தற்மத்துக்கு அகிதம் பண்ணின பேர் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற தோஷத்திலே
போகக் கடவராகவும் இப்படி
ன்மைக்கு கோயில் கணக்கு
வீரப்பந் எழுத்து.

செய்தி: தேவிகாபுரம் திருமலை
உடைய நாயனார்க்கு பூஜை,
திருப்பணி செய்யவும்,
கோயில் கோபுரத்தைச்
செப்பனிடவும்,
சவரப்பூண்டியில்
திருநாமத்துக் காணியாக நிலம்
விட்ட செய்தி
குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமன்
மஹாமண்டலீஸ்வரன் மேதினி
மீசுர கண்ட கட்டாரி சாளுவன்
இராசா பரமேஸ்வரன் அரியராய
விபாடன் பாஷைக்கு
தப்புவராய கண்டன் கண்ட
நாடு கொண்டு கொண்ட
நாடு குடாதான் துலுக்க
மொகறம் தவிர்த்த கெசபதி
தளவிபாடன் கச வேட்டை
கண்டருளிய ஸ்ரீவீரபிரதாபன்
பூறுவ தஷிண பச்சிம
உத்திரத்து சமுத்திராதிபதி
ஸ்ரீவீரபிரதாபன் நரச நாயக்க
உடையார் குமாரன் ஸ்ரீ
கிருஷ்ணதேவ மஹாராய பிரதி
இராச்சியம் பண்ணி அருளா
நின்ற சகார்தம் 1442 மேல்
செல்லா நின்ற விக்கிரம ஆண்டு
தாது சிங்க நாயற்று பூர்வ
பஷத்து சஷ்டியும் செவ்வாய்க்
கிழமையும் பெற்ற அனுஷத்து
நாள் செயங்கொண்ட சோழ
மண்டலத்து பல்குன்றக்
கோட்டத்து மேல் குன்ற நாடு
இராசா கெம்பீர மலைக்கு
அடுத்தப் பற்று முருகமங்கலப்
பற்று சவரப்பூண்டி
தேவஸ்தானம் தேவிகாபுரம்
திருமலை உடைய நாயனார்
திருநாமத்து காணியாக
மனபூஜைக்கும்
திருப்பணிக்கும்
கோபுரத்துக்கும்
தளப்புறுமாப் பண்ணிக்
குடுத்தோம் இந்த திருமலை
உடைய நாயினார்க்கு சதயித்த
முருகமங்கலப் பற்று
சவரப்பூண்டி ஆன இராபணம்
பூஜை திருப்பணிக்கும்
கோபுரத்துக்கும் நடக்கக்
கடவதாகவும் இந்த தன்மத்து
இயாதொருவர் அகிதம்
பண்ணினவர்கள் கெங்கைக்
கரையில் காராம் பசுவையும்
மாதா பிதாவையும் கொலை
செய்த பாவத்தில் போகக்
கடவராக இப்படிக்குக் கோயில்
கணக்கு உத்தண்டி எழுத்து.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு