எட்டயபுரம் வரலாறு

மிக பெரிய பாளையங்களில் எட்டயபுரமும் ஒன்று.....!!!

ஜெகவீர ராம குமாரப்ப எட்டப்ப நாயக்கர் என்ற அடுத்த பட்டதரசர் 1567  ஜனவரியில் இளசை என்ற பெயரை மாற்றி " எட்டயபுரம் " என்று பெயரை சூட்டி அங்கு சிவன் கோவில் , கோட்டை , அரண்மனை கட்டி " ராஜ கம்பள சாம்ராஜியத்தை " நிறுவுகிறார் . 


மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த குமார கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் எட்டயபுர அரசர் திருவிதாங்கூர் நாட்டுக்கு படையெடுத்து இரணியல் என்ற கோட்டையை தகர்த்தி திருவிதாங்கூர் நாட்டை வெல்கின்றனர் . வென்று திரும்பும் நிலையில் எதிரிகளின் அம்பு எய்தி எட்டயபுர அரசர் சாய்கிறார் . அப்பொழுது எட்டயபுர அரசர் எனது மக்களை ( கம்பளதார்களை ) இனி காவல் செய்வது யார் என்று கேட்டு இறந்து விடுகின்றார் . குமார கிருஷ்ணப்ப நாயக்கர் நான் நமது மக்களை கை விட மாட்டேன் என்றும் , என் உயிரை காப்பாற்ற உன் உயிரை தந்த அரசனே வீரனே இன்று முதல் உன் சந்ததிகள் " அய்யன் " என்ற பட்டம் கொண்டு வாழட்டும் என்று கூறி கழுகுமலை போன்ற பகுதிகளையும் எட்டயபுர அரசுக்கு தருகிறார் . 

அடுத்த வாரிசான ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யன் ஒரு நாள் வேட்டைக்கு சென்றுளார் ( கம்பளத்தார்கள் வேட்டைக்கு செல்வத்தையும் , அரசாட்சி செய்வதை மட்டுமே குல தொழிலாக கொண்டு வந்துள்ளனர் ) . அவ்வாறாக வேட்டைக்கு செல்லும் போது கொல்லவார்பட்டிக்கு பக்கத்தில் செல்லும் நிலையில் யாரோ எதிரி ஒருவன் ராஜாவை வெட்ட நினைத்தானாம் ஆனால் ராஜ தனது இடது கையினால் அவனையும் அவனின் குதிரையையும் ஒரே நேரத்தில் வெட்டினாராம் , அன்று முதல் மக்கள் அவருக்கு " இடங்கை கேஜ்ஜல்லு அப்ப நாயக்கர் " என்ற பட்டதோடு அழைக்கப்பட்டனர்.இவரின் வீரத்தை கண்டு வியந்த சேதுபதி மன்னர் பல பரிசுகளையும் , பெமல்லி என்ற ஊரினையும் பரிசாக தருகிறார் . 

இவர் கழுகுமலை சுப்ரமணிய சாமி கோவிலை அமைத்தும் , ஏழைகளுக்கு பல தானங்களை தந்தும் , கோவில் , குளம் பலவற்றை அமைத்து சிறப்பான ஆட்சியை தந்தார் . கழுகுமலை கோவில் மண்டபம் கட்டி உள்ளார் . லட்ச தீபம் ஏற்றுதல் , அஷ்ட மண்டபம் கட்டியும் , திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு பல விலை உயர்ந்த பொருட்களையும் தந்து உள்ளார் . இவர் பல கோவில்களை கட்டயுள்ளார் . அதில்சில சுந்திர விலாசம் , கலியான மகால் , சுப்ரமணிய விலாசம் மற்றும் பல . முக்கியமானது எட்டயபுர நகரமைப்பு . 

ஐந்து மகன்கள் :
ஜெகவீர குமார எட்டப்ப நாயக்கர் அய்யன் 
வெங்கடேஸ்வரர் 
எட்டு நாயக்கர் 
முத்துசாமி பாண்டியன் 
ராமசாமி பாண்டியன் 
இவரது காலத்தில் எட்டயபுரம் மிக சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது . 

படை வீரர்கள் :
கம்பளத்தார்கள் - 10000  
மணியகாரர்கள்- 4000 
கொண்டயம் கோட்டயர்கள்- 3000 
கன்னட கவுண்டர் , இசுலாமியர் - 1000, சக்கிலியர் , பிறர் - 200 

மொத்தம் ஏறக்குறைய 18000 படை வீரர்களை கொண்டும் , குதிரை படை , ஆயுத படை , வெடி குண்டு கிடங்கு வெய்தும் தமிழகத்தின் பாளயங்களிலேயே அதிக படை வீரர்களை கொண்டும் ,மிக சிறந்த அரசும் செய்தவர்கள் இவர்களே . 

சிறப்புகள் :
மதுரை 72 பாளையங்களில் மிக பெரிய பாளையங்களில் எட்டயபுரமும் ஒன்று 
மதுரை நாயக்கர் அரசர்களின் நெருங்கிய உறவினர்கள் என்பதால் பல சலுகைகள் அழிக்க பட்டுள்ளது படை வீரர்களை பலரை கொண்டு மிக சிறந்த ஆட்சியை செய்துள்ளனர் ஏறக்றைய ஆயிரம் ஆண்டு காலம் தமிழகத்தை ஒரே வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்துள்ளது தனி சிறப்பு . பாண்டியர்களின் ஆட்சி காலத்திலேயே சுயாட்சி செய்து வந்துள்ளது இவர்களின் வீரத்தை காட்டுகின்றது . தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற மிக முக்கியமானவர்களில் எட்டயபுரம் மன்னர்கள் குறிப்பிட தகுந்தவர்கள் . யாராலும் அழிக்க முடியாத வரலாறுகளை கொண்டவர்கள் 
தமிழ் பற்று கொண்டும் , தமிழர்களுகாக வாழ்ந்தும் , தமிழ் வளர்த்தும் பல தொண்டுகளை செய்துள்ளனர்

Comments

Popular posts from this blog

அனுப்பர் வரலாறு