விஜயநகர பேரரசு வரலாற்று வடமொழி தெலுங்கு நூல்கள்
வடமொழி, தெலுங்கு நூல்கள்
1.கங்கா தாசப் பிரதாப விலாசம்: கங்காதரன் என்பவரால் இயற்றப்பட்ட வடமொழி நாடகத்தின் முகவுரையில் இரண்டாம் தேவராயர் உடைய மகனாகிய மல்லிகார்ஜுனர், பாமினி சுல்தானும் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தபோது, அவர்களை எதிர்த்து நின்று எவ்விதம் வெற்றி பெற்றார் என்பது பற்றி விரிவாகக் கூறப்படுகிறது இந்த நூலில்.
2.அச்சுதராயர் அப்யூதயம்: இந்த வடமொழி நூல் ராஜநாத திண்டிமன் III என்ற ஆசிரியரால் இயற்றப் பெற்றது ஆகும். இந்த நூலில் துளுவ வம்சத்து தலைவனாகிய நரச நாயக்கருடைய வரலாறும், அவருடைய மக்கள் வீர நரசிம்மன் கிருஷ்ண தேவராயர் அச்சுதராயர் முதலிய அரசர்களுடைய பிறப்பு, வளர்ப்பும் போன்றவைகளோடு, அச்சுத தேவராயர் பற்றியும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. இவரின் ஆட்சி பெருமை முழுவதும் உணர்ந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும். சோழநாட்டிலும், மைசூர் நாட்டிலும், அச்சுத தேவராயர் அடைந்த வெற்றிகளையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
3.வரதாம்பிகா பரிணயம்: இவ் வடமொழி நூல் உரை நடையிட்ட செய்யுள் வகையான சம்பு காவியமாக திருமலாம்பாள் என்ற ஆசிரியை எழுதப்பட்டதாகும். துளுவ வம்சத்து நரச நாயக்கர் உடைய வெற்றிகளையும், நரச நாயக்கர் உடைய குடும்ப வரலாற்றையும், அச்சுத தேவராயருக்கும் வரதாம்பாளுக்கும் நடந்த திருமணம் பற்றியும் மிக விரிவாக கூறுகிறது. அச்சுததேவனுடைய அமைச்சர்கள் ஆகிய சாலகராஜா திருமலை தேவர்களுடைய வரலாறும், வேங்கடாத்ரி என்ற தேவராயர் மகனுடைய வரலாறு கூறப்பட்டுள்ளது
மாதவ்ய தாதுவிருத்தி இவ்விரண்டு வடமொழி நூல்களும் சாயனாச்சாரியாராலும், மாதவ வித்யாரண்யர், என்பவராலும் முறையே எழுதப்பட்டன. மாதவ்யதாது விருத்தியைச் சாயனாச்சாரியார்,உதயகிரி மகராஜ்ய மகாமண்டலீஸ்வரனும் கம்பராயனுடைய மகனுமாகிய இரண்டாம் சங்கமனுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
வேதபாஷ்யம் என்ற நூல் முதலாம் புக்கராயனுடைய அமைச்சராகிய மாதவ்வித்தியாரண்யர் என்பவரை பற்றியதாகும்.
நானார்த்த இரத்தின மாலை: இது இரண்டாம் ஹரிஹரர் உடைய தானைத் தலைவராகிய இருக்கப்ப தண்டநாதர் என்பவரால் இயற்றப்பட்டது.
நாராயண விலாசம் என்ற வடமொழி நாடகம் உதயகிரி விருப்பண்ண உடையாரால் எழுதப் பெற்றுள்ளது. இந்நாடகத்தின் ஆசிரியராகிய விருப்பண்ண உடையார் தம்மை தொண்டைமண்டலம், சோழ, பாண்டிய மண்டலங்களுக்கு ஆளினர் என்றும், இலங்கை நாட்டை வென்று வெற்றித் தூண் நாட்டியவர் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கு நூல்கள்
பில்லா லமரி பீனவீரபத்திரர் எழுதிய ஜெய்மினி பாரதம்: இன்நூல் பீனவீரபத்திரர் என்பவரால் நரசிம்மனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு எழுதப்பட்டதாகும். அபியூதயம் என்னும் நூலைப் போல், சாளுவ நரசிம்மனின் முன்னோர் ஆகிய சாளுவமங்கு தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசோடு இணைத்துக் கொள்வதற்கு சம்புவாயர்களையும்,மதுரை சுல்தான்களையும் வென்று அடக்கிய செய்திகளைப் பற்றிக் கூறுகிறது. திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமானுக்கு அறுபதினாயிரம் மாடப் பொன்களை தானம் செய்ததை கூறுகிறது.
ஆசாரிய சுத்தி முக்தாவளி: இந்நூல் திருவரங்கம் திருக்கோவிலின் வரலாற்றைப் பற்றிக் கூறும் தெலுங்கு நூலாகும். திருவரங்கத்தின் மீது இஸ்லாமியர் படை எழுச்சியையும், அரங்கநாதர் உருவச்சிலையை வைணவர்கள் எவ்விதம் காப்பாற்றினார் என்பதை பற்றி விரிவாகக் கூறி தேவரடியார் ஒருத்தி, திருவரங்கம் கோயிலை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த வரலாறு பற்றி விரிவாக விவரிக்கிறது.
1. History of south india by Neelakandan sastry
2. A Forgotten Empire by Robert Sewell
3. Wonder City of the South
4. History in Ruins
Suggested by Dr. N. V. Srinivasa rao
1.South India and her Mohammedan Invaders: written by KAN Sastri
2. Early Muslim expansion in South India :
3. Sources of Vijayanagar History
4.Vijayanagar Sexcentenary Commemoration Volume
5. Studies in the Third Dynasty of Vijayanagara
6. Medieval Jainism With Reference to Vijayanagara History
7. Social and Political Life Vijayanagara Empire Vol I ( AD 1346-AD 1646)
8. Social and Political life in Vijayanagara Empire Vol II ( AD 1346-AD 1646)

Suggested by Natarajan
1. The Vijayanagar Empire:Chronicles of Paes and Nuniz by
Domingos Paes and Fernao Nuniz
2. City of Victory:The rise and fall of Viajayanagara. Ratnakar Sadasyula
3. A History of Vijayanagar: The never to be forgotten Empire, Part 1 & 2
by Bangalore Suryanarain Row
4. Advanced Study in the History of Medieval India,Volume:1 by Jaswant Lal Mehta
5.Vijayanagara Voices: Exploring South Indian History and Hindu Literature by By William J. Jackson
6. Adil Shahi Dynasty: (Bijapur District, Deccan Plateau, Bahmani Sultanate, Aurangzeb, Yusuf Adil Shah, Ibrahim Adil Shah I, Mohammed Adil Shah, Qutb Shahi Dynasty) by Frederic P. Miller, Agnes F. Vandome, John McBrewster
7. Concise History of Islam By Muzaffar Husain Syed, Syed Saud Akhtar, B D Usmani
8. Sultans of Deccan India, 1500–1700: Opulence and Fantasy By Navina Najat Haidar, Marika Sardar
9. The History of Deccan by JDE Gribble ( two volumes) Mittal Publications
10.Life and Achievements of Sri Krishnadevaraya by R. Gopal, Karnataka (India). Directorate of Archaeology & Museums published by Directorate of Archaeology and Museums, Government of Karnataka, 2010. This book has been digitalised in 2017.

Online
http://historyofindia-madhunimkar.blogspot.co.id/2009/09/vijaynagar-kingdom.html?m=1
www.hampi.in
Comments
Post a Comment