"பாஞ்சை போர்முறை கிரேக்க போர்முறையை போன்று பழமையானது"-கர்னல் வெல்ஷ்-
பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள், சாகசங்கள், புகழ்ச்சிகள், குற்றச்சாட்டுகள், என்று பல நிலைகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் இருந்து நாம் தெரிந்து கொண்டாலும்,.... வீரம், சோகம், வெற்றி, இழப்பு, இவற்றை பற்றிதான் நாம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நான் பெருமையோடு பார்ப்பது.
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் போர் முறைகளை பற்றிச் சொல்லும் போது *"கிரேக்கப் போர் முறையை போன்று பழமையானது"* என்று ஆங்கில அதிகாரி கர்னல் வெல்ஸ் என்பவர் குறிப்பிடுவதை தான், நான் பெருமையாகப் பார்க்கிறேன்.
உலக நாகரிங்களிலே மிகப் பழமையானது கிரேக்க நாகரீகம், ஆனால் இவர் பாஞ்சாலங்குறிச்சி போர் முறையை கிரேக்கப் போர் முறையோடு ஒப்பிடுகிறார். இதுதான் நாம் வியந்து பார்க்க வேண்டிய விஷயம்.
ஆங்கிலேயர்களோடு இந்தியா முழுவதும் நேருக்கு நேர் சண்டையை பல ராஜ்ஜியங்கள் நடத்தி இருக்கின்றன, அனைத்து ராஜ்ஜியங்களும் இறுதியில் தோல்விதான் அடைந்திருக்கின்றன, ஆனால் மற்ற ராஜ்ஜியங்களில் காணப்படாத அதிசயத்தை அடிபணியாத குணத்தை பாஞ்சாலங்குறிச்சியில் தான் ஆங்கிலேயர்கள் பார்க்கிறார்கள்.
ராணுவத்தில் சம்பளம் வாங்கி கொண்டு உயர் அதிகாரி உத்தரவு இட்டால் மட்டுமே யுத்தத்திற்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் - சாவை ஒரு பொருட்டாக எண்ணாமல் தனது மண்ணை மீட்பதற்காக சிந்திய குருதிகளோடு பல்லாயிரம் பேர் வீரச்சாவை அடைந்திருக்கிறார்கள்.
கட்டபொம்மன் படையில் இருந்த அனைவருக்கும் சொந்த கருத்து இருந்தது, சுயமுடிவு எடுத்தவன் தான் படையில் இருந்தான். அதனால்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான உறுதியான கொள்கை முடிவை எடுத்தார்கள். தங்கள் மண்ணை மீட்பதற்காக யுத்தம் செய்தார்கள் பாஞ்சை மண்ணிலே ரத்தம் சிந்தி தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.
கட்டபொம்மன் படையிலே பங்கெடுத்து எதிரிகளோடு போரிட்டு உயிர்நீத்த மாவீரர்களின் வாரிசுகளே உங்கள் முன்னோர்களை போன்று நீங்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டாம், குறைந்தபட்சம் அந்த நினைவுச் சின்னங்களையாவது பாதுகாருங்கள்.
நன்றி
பெ.செந்தில்குமார்
பாஞ்சை போர்முழக்கம்.
Comments
Post a Comment