The Mysore papers 8 - எட்டயபுரம் சமஸ்தானமும், காஞ்சி மடமும்
The Mysore papers 8
மைசூர் மகாராணி எழுதிய கடிதத்தைப் பார்த்தோம். அதேபோல அன்று மைசூரைச் சுற்றியிருந்த மற்ற சமஸ்தானங்களைக் குறித்தும் பார்ப்போம்.
முதலில் துங்கா தரப்பினர் தங்களது சீமை என்று குறிப்பிடும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து பார்ப்போம்.
எட்டையபுரம் சமஸ்தானம் ஒரு மிக முக்கியமான சமஸ்தானம். ஶ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்களை ஆதரித்தவர்கள்.
திருநெல்வேலிச் சீமையின் எட்டையபுரம் ஜமீன் எழுதிய கடிதம்.
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 65வது பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஸுதர்சன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு ( செட்டிநாட்டின் இளையாற்றங்குடியில் ஸித்தியானதால் பூஜ்யஸ்ரீ இளையாத்தங்குடி பெரியவாள் என்று செல்லப்படுபவர். 1851 முதல் 1891 வரை ஶ்ரீ மடத்து ஆச்சார்யர்கள் ஆக இருந்தார்கள்.)எழுதிய கடிதம்.
ஸ்ரீமடத்தின் பிரதான சிஷ்யர் என்று எட்டயபுரம் அரசர் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வது கவனிக்கத்தக்கது.
ஸ்ரீமடத்தின் வழியடியவர்களாகிய திருநெல்வேலி எட்டயபுரம் அரசர் பரம்பரையில் உதித்த ஜகவீர ராமகுமார எட்டப்ப ஐயன் ராஜா அவர்கள் அனுப்பி வைத்த விக்ஞாபன பத்ரிகையின் ஒரு பகுதி...
"ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீமத் சங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிப ஸ்ரீமஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாள் ஸ்ரீஸந்நிதானத்துக்கு -
முக்கிய சிஷ்யரான எட்டயபுரம் ஸம்ஸ்தானாதிபதி ராஜா ஜகவீர ராமகுமார எட்டப்ப ஐயனவர்கள்
சாஷ்டாங்கமாக அனேக கோடி வந்தனம் செய்து தெரிவித்துக் கொண்ட விக்ஞாபன பத்ரிகை
ஸ்ரீசன்னிதானத்தின் பரிபூர்ணானுக்கிரக மகிமையால் நாமும் நமது புத்திர மித்திர பிராதிர் வர்க்கங்களும் க்ஷேமமாயிருக்கிறோம். ஸ்ரீசன்னிதானத்தின் நித்யபூஜாராதன, ப்ராஹ்மண ஸந்தர்ப்பணாதி மஹோத்ஸவங்களின் விசேஷங்களுக்கு அடிக்கடி ஸ்ரீமுகஸஹிதமாய் ப்ரஸாதம் அனுப்பும்படி ஆக்ஞையாக வேணுமென்று ப்ரார்த்திக்கிறோம்..."
இங்கே எட்டயபுரம் மகாராஜா தன்னை மடத்தின் பிரதான சிஷ்யர் என்று கூறுவது மட்டுமின்றி, ஸ்ரீமத் சங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிப ஸ்ரீமஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாள் என்று குறிப்பிடுவது காஞ்சி காமகோடி மடம் தற்காலிகமாகக் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தாலும், மைசூர் மகாராணி துவங்கி எட்டையபுரம் ஜமீன்தார் வரை அனைவருமே ஆதிசங்கரர் பிரதிஷ்டித்த காஞ்சி ஶ்ரீ காமகோடி பீடம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
மேலும் ஶ்ரீமத் ஸன்னிதானம், மகாஸன்னிதானம் என்றே காஞ்சி ஆசார்யர்கள் குறிப்பிடப்படுவதே வழக்கம் என்பதும் விளங்குகிறது.
இதுமட்டுமின்றி இன்றும் திருநெல்வேலியில் திருப்புடை மருதூர் மற்றும் பல கிராமங்களில் காஞ்சி மடத்து சிஷ்யர்கள் இருக்கிறார்கள்.
திருநெல்வேலி 'மடமாற்றம்' எல்லாம் கடந்த நூற்றிருபது ஆண்டுகளில் நடந்ததுதான் என்பது எட்டையபுரம் மகாராஜாவின் கடிதத்தால் நன்கு விளங்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை காஞ்சி ஶ்ரீ மடம் தமிழகம்,கேரளம் முழுவதும் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் வரை அனைத்து ஸ்மார்த்தர்களின் ஒரே குரு பீடமாகவும் பல அரசர்களை சிஷ்யர்களாகக் கொண்டிருந்தது.
சொல்லப்போனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிகள் வரை வேறெந்த சங்கர மடாதீசர்களும் தமிழகம் வந்ததுமில்லை.
இப்படி மகாராஜக்கள் எல்லாம் காஞ்சி ஶ்ரீமடம் தற்காலிகமாக கும்பகோணத்தில் முகாமிட்டிருந்த போதும் ஶ்ரீமடத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டித்த காஞ்சி காமகோடி பீடம் என்று சொல்கையில் , இந்த 'மடமாற்ற' கும்பலும், அவர்கள் சொன்ன அம்புலிமாமாஸ்தவத்தை நம்பி 'மடம்மாறிய' கும்பலும் மட்டுமே மைசூர் மகாராஜாவுக்கும் தஞ்சாவூர் மகாராஜாவுக்கும் சண்டை. ஆகவே தஞ்சாவூர் மகாராஜா 1820ல் தனிமடம்னு அம்புலிமாமா கதை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
Comments
Post a Comment