4. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர்

ஊமைத்துரை சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர்

அதீத நம்பிக்கை, பேர் இடியாய் அமைந்தது.
05.09.1799 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து வந்த ஜான் பானெர்மேன் (John Banneeman) தலமையில் நடந்த முதல் பாஞ்சை போர் 16.10.1799 ல் முடிவுக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாரில் தூக்கலிடப்படுகிறார், கோட்டையும் தரைமட்ட மாக்கப்பட்டது, உதவிய மற்ற பாளையகாரர்கள் சிலரை தூக்கிலிட்டும், சிலரை சிறையிலும் அடைத்தனர். அத்தோடு மற்ற பாளையக் காரர்கள் யாரேனும் கும்பெனியரை எதிர்த்தால் இதுதான் கதி என்றும் பிரச்சாரம் செய்தனர். கட்டபொம்மன் இறந்துவிட்டான், கோட்டையும் அழிந்துவிட்டது இனி யாரும் கலகம் செய்யமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையோடு இருந்த கும்பெனியாருக்கு ஊமைத்துரை சிறைமீட்பு நிகழ்வு ஓர் பேர் இடியாய் அமைந்தது. தவறை ஆராயத் தொடங்கினர்.
.               Colin Macaulay

தவறுக்கு காரணம்
பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் ஒரு மைல் தூரத்தில் ஓர் கோட்டை இருந்தது அதில் தான் படைகளும், அதிகாரிகளும் தங்கி இருந்தனர். முதல் பாஞ்சை போர் முடிந்தவுடன் மேஜர் பானர்மேன் சீமைக்கு சென்ற பிறகு, படைக்கு தளபதியாக ராபர்ட் டூரிங் (Rabert Turing) என்பவர் தலைமை ஏற்று இருந்தார், அவரும் சில மாதங்களில் போகவே, அவருக்கு பின்,  1800  மார்ச் ல் மேஜர் மெக்காலே (Major Macaulay) பதவி ஏற்றார். தலைமை தளபதியுமானர். இவர்தான் ஊமைத்துரை சிறைமீட்பின் போது அந்த கோட்டையில் தங்கி இருந்தவர். 
கோட்டையில் நடக்கும் நிகழ்வுகளை ஊமைத்துரை ரகசியமாய் உளவு அறிந்திருந்தார்.

நடக்கப்போகும் விருந்து ஒன்றின் நாளை அறிந்திருந்தார் அந்த நாள் ரகசியபடைக்கு தெரிவிக்க பட்டது. சீமையில் இருந்து புதிய துரை ஒருவர் வந்திருந்ததால் அவருக்கு சிறந்த விருந்து அளிக்க ஆண்களும், பெண்களுமாய் நிறைய வெள்ளையர்கள் வந்திருந்தனர். எல்லாரும் உண்டு களித்து உல்லாசமாய் இருந்த போது தான், சிறை உடைக்கபட்ட செய்தி தளபதியை வந்தடைந்தது. அவர் உடனே படைகளை ஏவினார், முன்னேற்பாடின்றி எதிர்த்த கும்பனி படைகள் தீரமான பாஞ்சை படையினர் முன்னே நிற்கமுடியமல் பாழ்பட்டு சிதைந்து ஓடினர். தோல்வியில் துவண்டனர்.
பாஞ்சை படையின் தீரத்தை பார்த்த ஆங்கில அதிகாரி தாம் தப்பி பிழைத்ததையும், மேலும் பாஞ்சை பதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்ததையும் இவ்வாறு எழுதி இருக்கிறான் 👇

" They however, let slip the fairest opportunity they ever could have enjoyed of crippling our force...

..."There we must all have perished, unprepared and unresisting, since they were several hundred strong, even before they left the place"...
                  -(Records of Government)-

"எவ்வாறாயினும், எங்கள் படையை அழித்து ஒழித்து அவர்கள் என்றும் வெற்றி இன்பத்தை அனுபவித்திருக்கக் கூடிய மிகச் சிறந்த வாய்ப்பை அவர்கள் எப்படியோ நழுவ விட்டனர்".

"அவர்கள் நூற்றுக்கணக்கான  பலம் வாய்ந்த  போர் வீரர்களாக இருந்தனர். யாதொரு ஆயத்தமும், எதிர்ப்பும் இல்லாமல் இருந்த எங்களை நோக்கி வந்திருந்தால், அந்த இடத்தை விட்டு அவர்கள் செல்லும் முன்பே, நாங்கள் அடியோடு அழிந்து போயிருப்போம்". 

இதில் நாம் புரிந்து கொள்வது யாதெனில், ஆயத்தமில்லாத அந்த கும்பனி படை மீது பாஞ்சை படை பாய்ந்திருந்தால் மொத்தமாக அழிக்கபட்டிருக்கும், ஆனால் ஊமைத்துரை நேர்மையான மாவீரன் அதனால் "உன்னுடைய கும்பெனி படை அனைத்தையும் ஒருங்கே திரட்டி கொண்டு என் கோட்டைக்கு வா! உன்னை அங்கே பார்த்து கொள்கிறேன்"  என்ற வீர முழக்கம் செய்திருப்பார் என்ற வீர உணர்வு நம் நெஞ்சிலே நிகழ்வதை இன்றும் நம்மால்உணர முடிகிறது.

கோட்டை மீண்டெழுதலை அடுத்த பதிவில் பார்ப்போம்.

#முரசு4

Comments

Popular posts from this blog

அனுப்பர் வரலாறு