கோல்கொண்டா சாசனம் - கொல்லவார்களின் சமய பீடங்கள்:
கோல்கொண்டா சாசனம் - கொல்லவார்களின் சமய பீடங்கள்:
---------------------------------------------------------------------------
தலைமைத்துவங்கள் மற்றும் பாளையங்களை தவிர, யாதவர்களுக்கு அவர்களின் மத சக்திகளின் காரணமாக பீடங்களும் (இருக்கைகள்) வழங்கப்பட்டன.
உதாரணமாக, 1425ல் (சக சம்வத்சரம்) வாரங்கலின் மகாராஜாவான #ஸ்ரீ_பிரதாப_ருத்ரதேவரால், #ஸ்ரீ_கொண்டைய்யா என்னும் குருவிற்கு, பதினான்கு இருக்கைகளின் தலைவராக வழங்கப்பட்ட சாசனத்தின் படி, வாரங்கலின் யாதவர்களிடையே பதினான்கு இருக்கைகள் (பீடங்கள்) இருந்தன. கி.பி. 1560இல் சுல்தான் குதுப்-ஷாகிப்-பின்-அப்துல்லாவால் பாக்யநகர் நிறுவப்பட்டபோது யாதவர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன, மேலும் மனுகல்லு என்று மாற்றப்பட்ட பெயருக்கு பதிலாக "#கோல்கொண்டா" என்ற பெயர் சூட்டப்பட்டது.
இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி ஆண்டு 1071 இல் சுல்தான் குதுப்-ஷாகிப்-அப்துல்லாவால் வழங்கப்பட்ட சாசனத்தின்படி, கொண்டைய்யா சுல்தானுக்காக கோட்டையைக் கட்டிக் கொடுத்தார்,
அந்த இடத்தின் மர்மத்தைத் தீர்ப்பதில் அவரது செல்வாக்கை பயன்படுத்தினார், மேலும் அவருக்காக நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்களையும் கண்டுபிடித்துக் கொடுத்தார்.
கொண்டைய்யாவின் உதவிகளுக்கு கைமாறாக சுல்தான் அவருக்கு பதினான்கு பீடங்களையும் மற்றும் பன்னிரெண்டு பிரிவு #கொல்லவார்கள் மற்றும் ஆடுமேய்ப்பர்களான #குறுப_கொல்லவார்களின் தலைவர்களுக்குரிய உரிமைகள் மற்றும் சலுகைகளையும் கொடுப்பதற்கான பட்டயத்தை வழங்கினார்.
கொண்டைய்யா, #பசவேஸ்வரர் என்னும் துறவியின் (லிங்காயத்து சமூகத்தவர்) சீடராக இருந்தாலும், யாதவ பீடங்களின் தலைவராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் கொல்லவார்கள் #வீரசைவ_மதத்தினுடைய செல்வாக்கின் கீழ் இருந்திருக்கலாம், இருப்பினும் அவர்கள் யாதவ வகைக்குள்ளாகவே இணைக்கப்பட்டிருந்தனர்.
* கொல்லவார்களுடைய சமய
பீடங்கள் :
-------------------------------------------------------
1, #ஸ்ருங்கேரி_மடம் (#சிருங்கேரி)
2, #புஷ்பகிரி_மடம்
3, #விருப்பாட்சி_மடம்
4, #கனகம்மா_மடம்
5, #மத்துவாச்சார்யுல_மடம்
6, #வினோதிவாரி_பீடம்
7, #கனுபார்த்திவாரி_பீடம்
8, #வீரபோஜன_பீடம்
9, #ராமானுஜ_பீடம்
10, #அய்யாளம்_பீடம்
11, #ஈரமாளிகராயணி_பீடம்
12, #ஹஸ்தினாபுரம்_மடம்
13, ?
14, ?
_
* பன்னிரெண்டு கொல்லவார்
பிரிவுகள்:
------------------------------------------------------
1, எர்ர கொல்ல
2, முஷ்டி கொல்ல
3, கரினே கொல்ல
4, பாகநாட்டி கொல்ல
5, பூஜ கொல்ல
6, மொதட்டில்லு கொல்ல
7, நல்ல சதனப்பு கொல்ல
8, குஜராத்தி கொல்ல
9, கம்ப கொல்ல
10, பெய்ய கொல்ல
11, வெய்ய கொல்ல மற்றும்
12, சித்த கொல்ல
_
* இரண்டு குறும கொல்லவார்
பிரிவுகள் :
------------------------------------------------------
1. பட்டி கங்கணம்
2. உன்னி கங்கணம்
-------------------------------------------------------------------------
குறிப்பு:
---------------
கர்நாடகத்தில் மிகுந்த பழமையும், தனிச்சிறப்பும், பெரும்புகழும் கொண்ட சிருக்கேரி பீடத்தை நிறுவியவர் ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் ஆவார்.
* விஜயநகரப்பேரரசின் சங்கம வம்சத்தார்கள் சிருங்கேரி மடத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
* சிருங்கேரி பீடத்தின் அப்போதைய மடாதிபதியான ஸ்ரீவித்யாரண்யர் குருதேவர் அவர்களில் வழிகாட்டுதலும், ஆசிகளையும் பெற்றே ஹரிஹரர் ராயர் மற்றும் புக்கராயர் விஜயநகரப்பேரரசை நிறுவினர் என்பதும் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
-
Comments
Post a Comment