ஒன்பது கம்பளம்
ராஜகம்பளத்தில் இருக்கும் ஒன்பது கம்பள மக்கள் ஒரே இனமாக , பழக்க வழக்கங்களை கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அரசும், நம்மில் சிலரும் பிரிவு பேசி முன்னேற்றம் காணாமல் இருப்பதை பற்றிய பதிவு.வரலாறு ரீதியில் இது முக்குலம், விஸ்வ கர்மா, 5 சாதிகள் கூட்டு என்று எல்லாம் கூட்டம் சேர்த்துவரலாறுகளில் சமந்தம் இல்லாத சாதிகளை கூட்டு சேர்க்கும் விதம் அல்ல 9 கம்பளம் என்பது.. நாடார் பிரிவில் 7 பிரிவினர் உள்ளனர், மறவர் பிரிவில் 17 பிரிவினர் உள்ளனர், அகமுடியார் பிரிவில் 20 க்கும் மேற்பட்ட பெரும் பிரிவுகள் உள்ளன, இதை போல வெள்ளாளர் போன்ற பல சாதிகளுக்கு உண்டு ஆனால் எந்த சாதிக்கும் இல்லாத ஒரு சாதி ராஜகம்பள இனத்துக்கு உண்டு. இது கம்பளத்து இனத்திலேயே பிரிவினை சொல்லி அரசு பதிவு செய்துள்ள சாதிகள் பட்டியலில் தவராக உள்ள ஒரே இனம் ராஜகம்பள இனம்.புளுக்கை சாணாஞ், பனையேறி சானான் என்று எல்லாம் எங்குமே சாதிகள் பட்டியலில் இல்லை.. சானான் , நாடார் என்றே வாங்குகின்றனர் . கொண்டியம் கட்டி மறவர், ஆப்பாநாடு மறவர் என்று எங்குமே அவர்களின்குல பெயரில் சாதி சான்றிதல் இல்லை பொதுவாக மறவர் என்றே வாங்குவார்கள் ஆனால் நாம் மட்டுமே இன்றும் சில்லவார், கொல்லவார், தொழுவர் என்று உள்ளோம்.வரலாறு ரீதியில் 9 கம்பளம் :ராஜகம்பள இனத்தில் 9 கம்பளம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று..திருமண முறைக்காக பிரிக்க பட்ட குலங்கள் இது, ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களில் மகள் வழியினர், மகன் வழியினரை அக்காலத்தில் பிரித்து நோய்கள் வராமல் இருக்க பிரித்தார்கள் அதுவே இன்று 9 கம்பளமும், 81 பிரிவும் உள்ளது . ஒரு ஒரு கம்பளத்துக்கும்9 தனி பிரிவுகளும் உள்ளது.இதில் கால போக்கில் 9 கம்பளம் மறைந்து ஒரு சிலர் கம்பள இனத்தில் இருந்து சென்றதும் , ஒரு சிலர்அதிக ஆட்சி பொறுப்பில் இருந்ததால் தங்களை தனி கம்பலமாக அறிவித்தும் வாழ்ந்து வந்துள்ளனர்.கொல்லவார், சில்லவார், தோக்கலவார், அனுப்பர், குரூமர், காப்பிலியார், வெகீளிவார், பாலமுகாரு, எரகொல்ல என்பது 9 கம்பளங்களாக இன்று உள்ளது. ஒரு சில சாதிகளை ஒதுக்கியும் ஒரு சில சாதிகள் கலந்தும் விட்டன. இதில் சில்லாவார், காப்பிலியார்,பாலமுகாரு, வெகிழிவார் எல்லாம் ஒரே இனமே..காபிலீயார் கன்னடம் பேசுவதாலும், சில்லவார், பாலமுகார் அதிக பாளையங்களை ஆண்டு மக்கள் தொகை அதிகம்இருப்பதால் தங்களை தனி கம்பள உரிமை கொண்டனர் என்பதால் பிரிந்து உரிமைகளை வாங்கினார்கள்.அதே போல கொல்லவார், எரகொல்ல, அனுப்பர் என்றாலும் ஒரே இனமே . இதில் அனுப்பர் கன்னட மொழி பேசுவதாலும், எர கொல்ல ராஜகம்பள இனத்திலேயே கம்பள தாய் எல்லாம்மா அவர்களுக்கு முதல் குழந்தை என்பதாலும் பெரும் ஆட்சி அதிகாரம் கொண்டதாலும் தங்களை தனி கம்பளமாக அடையாளம் காட்டினார்கள்.தோக்கலவார் , வெகீளி கூட்டத்தில் இருந்து ஆற்றினை கடக்கையில் தனியாக பசுமாடுகளில் வால்பிடித்து சென்றதால் முத்திஆவுலு வாரு என்றும் தோக்கலவார் என்றும் அழைக்க படுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் சில பகுதிகளில் வாழ்கின்றனர்.குரூமர் என்பவர்கள் குறி( கோர்ர ) ஆடுகளை மெப்பவர்கள் என்ற பெயரில் தனி இனமாக தொண்டைமாண்டல பல்லva வம்சமாக கருதப்பட்டு தனி கம்பள மரியாதை பெற்றனர். கம்பள இனத்தில் இவர்கள் கடைசி கம்பள உரிமையினை பெற்றனர்.9 கம்பள பெயர் காரணம்:1. கொல்லவார் - கொல்ல என்றால் பசுமாடுகளை வைத்து இருப்பவர்கள் என்று பொருள் ( அதிக செல்வங்களாஇ பெற்றவர்கள் ) . அக்காலத்தில் அதிக பசுக்களை வைத்து இருந்தவர்களே செல்வந்தர்கள்.2. வெகிலிவர்- எகிளி என்ற மகாபாரத வேடர் ஒருவரின் வழி வந்தவர்கள் ( வேட்டை ஆடும் மரபினர் )3. குரூமர்- குறி ஆடுகளை வைத்து இருந்தவர்கள்4. காப்பிலியார் - காப்பு இனத்தோர் , காவல் செய்தோர்.5. அனுப்பர் - அனுப்ப என்ற பாம்பின் வழி வந்தவர்கள்6. பாலமுகார் - படை பலம் கொண்டவர்கள். பாலமு என்றாavல் படை என்று பொருள்.7.சில்லவார் - சில்லா என்றால் ஒழுக்கம் என்று சமஸ்கிரத பொருள்.8. எரகொல்ல - தீய்யில் இருந்து வந்தவர்கள்9. தோக்கலவார் - வால் பிடித்து வந்தவர்கள்.. முன்னால் தமிழகத்தில் வந்தவர்கள் .குலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகள் :கொல்லவார், வெகிலிவர் மக்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர். குரூமர் குறிப்பிட்ட தகுந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ளார்கள். அனுப்பர், தோக்கலவார் மக்கள் தொகையில் குறைவு என்றாலும் பரவி ஆங்காங்கே உள்ளார்கள் குறிப்பாக தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி பகுதிகளில் உள்ளார்கள்.கொல்லவார் மக்கள் அதிக அளவில் விருதுநகர், கமுதி, அருப்புக்கோட்டை, மதுரை சேடப்பட்டி, திருமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு,ராசிபுரம், அந்தியூர், திருப்பூர், கோபிசெட்டிபாளையம், புதூர் ( தூத்துக்குடி ) , பெருந்துறை, கோவை மாவட்டம் , கரூர் பகுதிகள்.வெகிலிவர் மக்கள் தேனி, கம்பம், போடி நாயக்கனூர், கந்டமனூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம்,எட்டையாபுரம், சேந்தமங்களம், கொல்லிமலை, பரமத்தி, உடுமலைபேட்டை, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, சேலம் ஓமலூர், மேச்சேரி, கோவை மாவட்டம், அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் பகுதிகள், தொட்டியம்.9 கம்பள மக்கள் இணைந்தால் மட்டுமே வளர்ச்i வரும் :குறிப்பாக தூத்துக்குடி வடக்கு புதூர் பகுதிகள் முழுக்க கொல்லவார் மக்கள் பெரும்பான்மை கொண்டும், எட்டையாபுரம் பகுதிகள் வெகிளிவார் மக்கள் பெரும்பான்மை கொண்டும் வாழ்கின்றனர். இந்த இரண்டு பகுதிகள் சேர்ந்தது தான் வில்ளாத்திகுளம்தொகுதி. இங்கு இந்த இரு மக்களும் சேர்ந்தால் மட்டுமே பெரும்பான்மை. தனி தனியாக இருப்பதால் நம்மை விட பல பிரிவுகளையும் , ஒற்றுமை குறைவாக இருக்கும் ரெட்டியார்கள் தொடர்ந்து தங்கள் வசம் வைத்து உள்ளனர்.இதே நிலமை தான் உடுமலைப்பேட்டை , கரூர், நாமக்கல் கோவை மாவட்ட பகுதிகளும் . இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்களாக உள்ளனர்.எது தடுக்கின்றது ?முக்கியமாக நமது இன தலைவர்களும் , ஊரில் பெரியவர்கள் என்று சொல்லுபவர்களும், பழைய சமூக தலைவர்களுமே. இவர்கள் அனைத்து கம்பளமும் அல்லது அனைத்து பகுதி ராஜகம்பள மக்கள் சேர்ந்தால் எங்குஅந்த பகுதி மக்கள் தலை எடுத்து விடுவார்களோ என்ற பொறாமையிலும் தங்களது கட்டுப்பாடு குறைந்துவிடும் என்றும் நினைக்கின்றனர்.இன்னொன்று ஒரு பிரிவு மக்கள் மது பழக்கம் மிக குறைவாக இருப்பவர்கள், ஒரு பிரிவு மக்கள் அதிக அளவில் குடிப்பவர்கள் என்ற வேறுபாடும் , மது அருந்தாத அந்த பிரிவு மக்கள் மது குடிக்கும் மக்களைகீழ் சமூகம் என்று சொல்லி சேர மறுக்கின்றனர்.மேலும் கொல்ல மற்றும் வெகிளி மக்கள் அண்ணன் தம்பி முறை கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்ய கூடாது என்ற முறை காலம் காலமாக வைத்து இருந்தாலும் தற்போது வரும் இளைஞர்கள் சிலர் குலம் மாறி திருமணம் செய்வது பெருசுகளை கோபம் செய்கின்றன.பெண்கள் குறைவாக இருக்கும் சமூகம் :ராஜகம்பள இனத்தில் சிசு கொலை என்பதே இல்லை என்றாலும் காலம் காலமாக பெண் குழந்தைகள் குறைவாக இருப்பதால், திருமணத்துக்கு பெண் தேடும் பொழுது கிடைப்பதில்லை . இதில் பல ஊர் மக்களும் சேர்ந்தால் எங்கு நாமக்கல் மாவட்ட கம்பள ஆண், பொள்ளாச்சி பெண் னை திருமணம் செய்தால் அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் எங்கு செல்வது என்ற முறையில் பெரும்பாலும் தங்கள் பகுதிகளுக்குள்ள் மட்டுமே திருமணம் செய்தும் வேறு எங்குமே செல்லாமலும் இருந்து வருகின்றனர். இது இவர்களை வெளி உலகம் தெரியாதவர்களாக செய்கின்றன.கல்வி அறிவு மிக மிக குறைவு :கல்வி அறிவு இல்லாத சமூகங்களின் கணக்கு எடுத்தால் கண்டிப்பாக நாம் இருப்போம். இதற்கு முக்கிய காரணம் பழமை என்று சொல்லி சிலவற்றை கைவிடாத போக்கு, குழந்தை திருமணம், ஊர் பெரியவர்கள் சிலர் தங்களது பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்க வைத்து பிற குழந்தைகளை கட்டுபாடு செய்து படிக்காமல் பார்த்து கொள்வது.ராஜகம்பளம் சமூகம் வளர வேண்டும் என்றால் :1. மது இல்லா ராஜகம்பள இனத்தை உருவாக்க வேண்டும்2. கலப்பு திருமணம் என்பதை ஏற்று கொள்ளவே கூடாது3. ராஜகம்பள 9 கம்பள மக்களும் ஒரே குறியீட்டில் அரசின் பதிவில் வரவேண்டும்4. கல்வி பொருளாதாரத்தில்தனி மனித ஏற்றம் காண வேண்டும்5. பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டும்.9 கம்பளமும் ஒன்றாக இணைய உறுதி கொள்வோம் :9 கம்பள மக்களையும் கன்னட கவுண்டர், கொல்லவார், தோக்கலவார், சில்லாவார் என்று இல்லாமல் கம்பளம் என்று அனைவரையும் எங்கு கண்டாலும் நாமெல்லாம் ஒன்னு தான் என்று கூறி அனைவரும் ஒன்றாக இருந்து நமக்கான உரிமைகளை எம்.பி.சி இல் அனைத்து கம்பளம் இடம் பெற வேண்டும்.ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர் என்று யார் நமது கிளை பிரிவினர் சான்றிதல் வாங்கினாலும் நாம் அவர்களை எதிர்கக கூடாது, நமது சமூக மக்கள் தொகை அதிகம் காட்ட தெரிய படுத்த இதுவே உதவும்.எல்லா அரசியல் கட்சியிலும் இருக்க வேண்டும் :குறிப்பிட்ட கட்சி எங்க கட்சி என்று தரப்போதைய சூழ்நிலையில் இருக்க வேண்டாம், நமது சமூகத்தில் பிறந்து உயர்ந்து வந்தால் பிறகு பார்த்து கொள்ளலாம் ஆனால் தற்போது எந்த கட்சிக்கும் கொடி பிடிப்பதை தவிற்க வேண்டும் ஆனால் எல்லா கட்சிகளிலும் இருக்க வேண்டும்.வீண் சிலவுகளை குறைக்க வேண்டும்:கல்வி வளர்ச்சி, விழிப்புணர்வு வளர்ச்சிக்கெ முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், விழாக்களில் banner, கம்பங்களுக்கு முக்கிய துவம் கொடுப்பதை விட கல்விக்கு முக்கிய துவம் கொடுக்க வேண்டும் .பிற சமூக கூட்டு:குறிப்பாக கம்பள கவுண்டர்கள் வெள்ளாளர் மக்களோடும், கம்பள நாயக்கர்கள் கம்மாவார் மக்களோடும் சேர்ந்து வெகுளியாக அமைப்பு வைத்து அல்லது அவர்கள் அரசியல்வாதிகளுக்கு நாம் ஆதாரவு தருவது இருக்க கூடாது. உண்மையான நட்போடும், தெலுங்கர் அல்லது நமது நாயக்கர் பட்டம் கொண்டவர்கள் என்ற உதவியினை பெறுவதோ அல்லது நாம் தருவதோ இருக்கலாமே தவிர எந்த காலத்திலும் நமது கம்பள பாரம்பரியம்,கம்பள அடையாளத்தை விட கூடாது .9 கம்பளம் கம்பளத்தார் என்று கூட வேண்டும்.. அதற்கு உங்கள் முயற்சி என்ன, அதற்கு உங்கள் பணி என்ன என்பதை கூறவும். மாற்று கருத்து கொண்டவர்கள்
Comments
Post a Comment