தேவராட்டம்
<<<<<<<<#தேவராட்டம்>>>>>>>>
உலக ஆடல்களிலேயே ராஜாக்கள் , அரசர்கள் ஆடும் ஆட்டம் “தேவராட்டம் “. தெற்கு சீமைகளிலே ராஜ குடியில் பிறந்த கம்பளத்து நாயக்கர் சமுதாயம் ஆடும் ஆட்டம் இது . தேவராட்டம் என்பது “தேவர்களின் ஆட்டம் “, கம்பளத்தார்கள் அரசர்களாகவும், வீரர்களாகவும் இருந்ததால் இவர்களை தெய்வமாக எண்ணி மற்ற இனத்தினர் தேவர் என்றே அழைத்தார்கள் . எனவே இவர்கள் ஆடும் ஆட்டம் “தேவராட்டம் ” என்று ஆனது .
=>தேவராட்டம் என்பது பாண்டிய நாட்டில் வாழும் கம்பளத்து சமுதாய மக்களின் அனைத்து நிகழ்சிகளிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு நிகழ்வு .
=> அக்காலத்தில் ராஜாக்களான கம்பள சமுதாய மக்கள் போர் அல்லது வேட்டைக்கு சென்று வெற்றி பெற்று வந்தால் மகிழ்ச்சி பெருக்கில் மெல்லிய அசைவுகளுக்கு தகுந்த வகையில் வீரமிக்கவர்களாக தலைபாகை கட்டி கொண்டும், மீசையை முறுக்கி கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை ஆட்டங்கள் வாயிலாக காட்டுவர்.இவ்வாறு இவர்கள் ஆடும் பொழுது ஏனைய கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களும் ராஜாவுக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்டமே “தேவராட்டம் ” என்னும் பாரம்பரியம் மிக்க ஆட்டம் .
=>இது ராஜ கம்பளத்தார் சமுதாயத்திற்கு மட்டுமே உரியதான கலை , வேறு யாரும் இதை ஆடுவது கிடையாது ..
=>பொதுவாக இவ்வகை ஆட்டம் திருமணம் , மஞ்சள் நீராட்டு விழா , கோவில் திருவிழா என அனைத்து கம்பளத்தார் சுப நிகழ்சிகளிலும் கட்டாயம் நடை பெரும்.
=>தேவர் துதும்பி என்னும் இசை இசைக்க அரசர்கள் (ராஜ கம்பளத்து மக்கள் ) ஆடும் ஆட்டத்தை காண கண் கோடி வேண்டும் என்று பிற இனத்தவர்கள் இவர்களை புகழ்வதை தெற்கு கரிசல் பூமியிலே இன்றும் காணமுடிகிறது .
=>18 அடவுகள் முதல் 72 அடவுகள் கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் அனைவரையும் இன்று வரை இவர்களின் ஆதிக்கத்திலேயே நிலை பெற செய்கின்றன . புறநானுறு போன்ற நூல்களில் பாடபெற்ற ராஜாக்களின் ஆட்டமான ” முன்தேருகுரவை “, “பின்தேருகுரவை ” சேர்க்கையே தற்போதைய “தேவராட்டம் “. இதிலிருந்து இவர்களின் பழமையையும் , பெருமையையும் அறிய முடிகிறது .
இப்படிப்பட்ட நாயக்கர்களின் கலையை அழியாமால் காப்போம் , அரசாண்ட இனம் நாம் என்பதை மறக்காமல் இருப்போம்
Comments
Post a Comment