அனுப்பர் வரலாறு
- Get link
- X
- Other Apps
Saturday, 14 February 2015
அனுப்பர் வரலாறு.
வணக்கம்!.
வரலாறு:
கன்னட மொழி பேசுவோர் மற்றும், பேசுவோர் அல்லாத கவுண்டர் இனத்தவர்களுக்கும், தெலுங்கு மொழி பேசுவோர்களான நாயுடு, ரெட்டியார் இனத்தவர்களுக்கும் தலைமை பீடமாக இருந்தவர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர். இவரின் நேரடி வம்சாவழியினர் சிறுவாலை சம்ஸ்தானத்து அரண்மனையார்.
அரண்மனையார், கம்பளி, குருக்கள், பெருமாள் கோவில் பூசாரி, ஆவுக்காரன், தின்னப்பெத்தன். மானகாரன், கட்டியக்காரன் ஆகிய எட்டு வகை அதிகாரிகளின் துணை கொண்டு, தென்னாட்டை நீதியாக தெய்வீக சக்தியுடன் ஆட்சி செய்தார்கள்.
அனுப்பக்கவுண்டர்கள் எங்கனம் விஜய நகர பேரரசின் வம்சா வழியினராக இந்நாட்டை ஆட்சி செய்தார்கள் என்ற வரலாறு, சிறுவாலை அரண்மனையாரிடமிருந்த ஓலைச்சுவடிகளிலிருந்து காணப்படுகிறது.அவ்வரலாற்றைக் காண்போம்.
கம்பளத்தார்களின் தகப்பனார் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்றும், நாகர் இனத்தை சேர்ந்த பத்திராட்சி, கமலாட்சிஆகியோர் வளர்ப்புத் தாய்கள் என்றும் பட்டயங்கள் கூறுகின்றன.அதாவது ஸ்ரீ கிருஷ்ணபகவான் மார்பில் உள்ள அல்லி மலர் வடிவமான மறுவிலிருந்து அனுப்பர் குல முதல் கொழுந்துகளான அனுராஜன்,மற்றும் அனுபதி ஆகியோர் ஸ்ரீ கிருஷ்ண அம்சமாகத் தோன்றி அவர்கள் மூலமாக கம்பளத்தார்களின் வம்சம் பெருகி விரிந்ததாகவும், இவர்கள் பசுக்களை மேய்த்து, பட்டி போட்டு வாழ்ந்து வந்தார்கள் என்றும் பேசப்படுகிறது.
காலச்சக்கரம் சுழல்கிறது. காலத்தின் போக்கில், அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அரசியல் ஓருங்கிணைப்பு அமைப்பு இந்த மண்ணில் இல்லை என்பதையறிந்த துலுக்கர்கள் இத்துணைக்கண்டத்தில் பலம் கொண்ட படைகளுடன் புகுந்து தனித்தனியே சிதறிக்கிடந்த அரசுகளின் மீது தாக்குதல் நடத்தி பரத பூமியை கைப்பற்றி டில்லியில் மொகலாயர் என்ற பெயரில் ஆட்சி நடத்தி வந்தார்கள்.
மொகலாய அரசர் ஒருவர், கம்பளத்தார்களிடம் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். கம்பளத்தார்கள், இஸ்லாமியர்களுக்கு தங்கள் குலப்பெண்ணை மணமுடிதத்துக்கொடுக்க மறுத்து தங்கள் குலமானம் காக்க நாடு கடந்து, யமுனை நதிக்குத் தெற்கே இடம்பெயர்ந்து கர்நாடகமான , தென்னாடு வந்தடைந்தனர். அப்போதுதான் அவர்களின் தாய்மொழியான கன்னடம் அந்த மண்ணுக்கும்
தாய்மொழியானது.மலைப்பிரதேசமாகிய கெருநாடு (அதுதான் பின்னர் கர்நாடகமானது.கெரு என்றால் கன்னடத்தில் பசு.பசுக்கள் மேய்க்கும் தொழிலைக் கொண்ட நாடு கர்நாடக பூமி என்பதே அதன் பொருளாகும்)தங்கள் பசுமேய்க்கும் தகுந்த இடமாக அமைந்தது.
தங்கள் பட்டிக்கு(பசுக்கூட்டப் பண்ணை) ஒரு தலைவர் வேண்டும் என விரும்பி, ஸ்ரீசஞ்சீவி முனிவரின் ஆசியோடு, ஸ்ரீ அச்சுதராமர் என்ற தொட்டய்யனை தலைவராக நியமித்து, ஸ்ரீ ஒன்னம்மாள் என்ற அம்மனை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.
நாளுக்கு நாளாக, பட்டி பெருகி, பசுக்களும் அதிகரித்து, கம்பளத்தார்களின் வாரிசுகளும் அதிகரித்து, கூட்டம் அதிகமாகி வர, மேலும் இடம் பெயர்ந்து அதற்கு தெற்கே இருக்கின்ற விஜயநகரத்து மன்னன் ராயர் அவர்களிடம் சென்று, தாங்கள் தமது பட்டிப் பசுக்களுடன், அந்த நாட்டு எல்லைக்குள் பட்டி போட்டு வாழ்ந்து வர, அனுமதி கேட்பதற்காக, மன்னனைக் காணச் செல்லும் வழியில் மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி ஒரு நதி, விஜய நகரத்துக்கு அருகாமையில் ரத்தமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ஸ்ரீமதி ஒன்னம்மாள், இது ஒரு முனிவரின் சாபத்தால் நேர்ந்தது என அறிந்து, தனது பட்டியிலுள்ள ஒரு பசுவை வரவழைத்து, ஸ்ரீ பகவான் கண்ணபிரானை நினைத்து, தனது கணவர் அட்டிய தொட்டய்யனை தொட்டு வணங்கி, கம்பளத்துப் பெண்களை அழைத்து, தமது குல ஆசாரப்படி, மங்கள இசை முழக்கி, பசுவின் பாலைக் கறந்து, இரத்த ஆற்றில் கலந்தால்.அப்போது அந்த ரத்தாறு பாலாறாக மாறியது.
மனனன், இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன், இப்படியும் ஓர் வரம் பெற்றுள்ள மக்கள், நமது நாட்டின் மண்ணிலே வந்தது நமது நமது பாக்கியம் என வியந்து, ஆனந்தம் அடைந்தார். கம்பளத்தார்களின் பசு பட்டிகளை என் ஆளுகைக்குள் எங்கு வேண்டுமானாலும் அமைத்தும் மேய்த்தும் சுதந்திரமாக வாழலாம் , எந்தவிதமான வரியும கட்டத் தேவை இல்லை என அரசாணையாக அறிவித்தான். கம்பளத்தாரின் தலைவர் அச்சுராமனுக்கு, அரண்மனை கட்டி வாசம் செய்யவும் அதிகாரம் கொடுத்து, உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கம்பளத்தாரின் தலைவரான ஸ்ரீ அட்டிய தொட்டய்யன், மஞ்சை நாட்டு பிரதேசத்தில் வாசம் செய்யவும், இவரின் தலைமையின் கீழ் உள்ள கம்பளத்தார்கள்,விஜயநகர மன்னனிடம் படைத்தலைவர்களாகவும், வீரர்களாகவும் நாட்டை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதிகாரிகளாகவும் மன்னனால் நியமிக்கப் பட்டனர்,இக்கம்பளத்தார் அல்லியரென்றும் அழைக்கப்பட்டனர்.
குருஞ்சை நாட்டில், தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், காராம் பசுக்களை மேய்த்து வாழ்ந்தமையால், காப்பில்லியரென்றும்,ஆதாள நாட்டில், தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், பசுக்களை மேய்த்து வாழ்ந்தமையால், ஏர்கோல் அல்லியரென்றும்,பூதாள நாட்டில் தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், செம்மறி ஆடுகளை மேய்த்து வாழ்ந்தமையால், உக்கல்லியர் என்றும்,மே நாட்டில் தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், குரும்பை ஆடுகளை மேய்த்து வாழ்ந்தமையால், காட்டல்லியார்(குரும்பர்) என்றும்,மஞ்சை நாடு, குருஞ்சை நாடு, பூதாள நாடு, மே நாடு இப்பிரதேசங்களைச்சேர்ந்த கம்பளத்தார்கள், கன்னட மொழி பேசுவோர்களான படியால், தங்கள் பட்டிக்கு அட்டியென்றும்,
குப்பி நாடும் ஆதாள நாடும் குளிர் நாடு பிரதேசங்களை சேர்ந்த கம்பளத்தார்கள், தெலுங்கு மொழி பேசுவோர்களான படியால், தங்கள் பட்டிக்கு தொட்டியென்றும் வழங்கலாயினர்.
ஒரு சமயம், விஜய நகரப்பேரரசு வெள்ளத்தில் தத்தளித்தது. நாடே தண்ணீரில் அழிந்து போகுமோ, என ஐயப்பட்டு, மக்களும் சிப்பாய்களும் முழுபலம் கொண்டு, கண்மாய்களில் உடைந்த உடைப்புகளை அடைக்க முடியாமல் தத்தளித்தனர்.
இச்செய்தி அறிந்த கண்ணபிரான் அருள் பெற்ற ஸ்ரீமதி ஒன்னம்மாள், ஸ்ரீ கண்ணபிரானை வணங்கி, தன் கையில் பட்டாக்கத்தியை எடுத்து, அத்துடன் ஒரு எழுமிச்சம் பழத்தையும் மந்தரித்து, தன் கணவர் கையில் கொடுத்து, கம்பளத்தார்கள் புடை சூழ, உடைந்த உடைப்புகள் நோக்கி புறப்பட்டு, உடைப்புள்ள ஏரிகளுக்குச் சென்று, தாங்கள் கொண்டுவந்த எழும்மிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, உடைப்பில் போட்டு, ஸ்ரீமதி ஒன்னம்மாள் தன்கையால் ஒரு உருண்டை மண்ணையும் போட்டவுடனே, கரை தானே வளர்ந்து, உடைப்பு அடைபட்டது, வந்த வெள்ளமும் கட்டுக்குள் அடங்கியது.விஜய நகர வேந்தனும், மக்களும் இதைக்கண்டு ஆனந்தம் கொண்டார்கள்.
ஸ்ரீமதி ஒன்னம்மாளின் தெய்வ சக்தியால் இரத்த ஆறு
பாலாறாக மாறியதும், உடைந்த ஏரிகள் அடைக்கப்பட்டதும், அரசனையும், மக்களையும் திகைப்புக்குள்ளாக்கியது.அனுப்பர்கள் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர்கள், அருள்வாக்குப் பெற்றவர்கள் மட்டும் அல்ல சத்தியவாளர்கள் என்றும் போற்றி, அனுப்பர்களை மிகமிக மரியாதையுடன் நடத்தினார்கள்.
விஜய நகரப் பேரரசையே ஆட்சி செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் அனுப்பர்கள் என்பதை பேரரசன் உணர்ந்ததால் ஸ்ரீமதி ஒன்னம்மாளின் புதல்வர் ஸ்ரீ பொட்டியதொட்டய்யனின் வீரமிகு செயல்கள் மெச்சி, அல்லிகுல அனுப்பர்களுக்கு, நாட்டையே பரிசாகக் கொடுத்தான்.ஸ்ரீ பொட்டியதொட்டய்யனுக்கு, ஸ்ரீ கண்ணபிரானின் அருளால் வரம்பெற்ற குதிரை ஒன்று, குரு சஞ்சீவி முனிவரால் கொடுக்கப்படுகின்றது. ஸ்ரீ சூரிய பகவானின் அருளாலும், மற்றொரு குதிரை ஒன்றும் கிடைக்கிறது.
இக்குதிரைகளில் ஏறி, வாள் ஏந்தி, சவாரி செய்து, போர்க்களங்களில் வெற்றி வாகை சூடுகிறார் பொட்டிய தொட்டய்யன்.
விஜய நகர வேந்தனே அச்சங்கொள்ளும் அளவுக்கு, சக்தி வாய்ந்த பேரரசனான வானாதிராயனையே, போரில் வெற்றி வாகை சூடுகிறார் ஸ்ரீ பொட்டிய தொட்டய்யன். வானாதிராயன் தன் மகளையே பொட்டிய தொட்டய்யனுக்கு கொடுத்து, தனது வானாதிக் கோட்டையையே, ஸ்ரீ பொட்டிய தொட்டய்யனுக்கு பரிசாகக் கொடுக்கிறார்.
விஜய நகர வேந்தனுக்கு, பகை எனப்பட்ட அரசர்களையும் நீதிக்கும், நேர்மைக்கும், இரக்க உணர்விற்கும், புறம்பான அரசர்களையும், எட்டுத்திக்குகளிலும் வென்று, ஆங்காங்கே விஜய நகரப்பேரரசுடன் பந்தப்படுத்துகிறார். விஜய நகரப்பேரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். இதுமுதல் தொட்டய்யன் என்ற நாமம் தொட்டராயர் என்றழைக்கப்படுகிறது.
விஜய நகரப் பேரரசின் அமைச்சரான இருகரை மல்லன் என்பவன் மீது அனுப்பரசர்கள் மீது பொறாமை கொண்டு அனுப்பரரசுகளை அழித்துவிட வேண்டுமென பல தீமைகளை செய்கிறான். மல்லனின் துர்போதனையால், மகாராணியின் மூலமாக, ஸ்ரீ பொட்டிய தொட்டராயரின் விசுவாசம் சோதனைக்குள்ளாகப்படுகிறது.
மூன்று கட்டளைகளை நிறைவேற்ற பேரரசனால் பணிக்கப்படுகிறார் தொட்டராயர்.
1. விஜய நகர வேந்தனால் பொட்டிய தொட்டராயருக்குக் கொடுக்கப்பட்ட ராய கண்டன் விருதை திரும்ப கொடுக்க வேண்டும்.
2. சூரிய பகவான் அருளால் பெறப்பெற்ற குதிரையை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.
3. அக்கினிக் குண்டம் வளர்த்து, அந்த அக்கினியில் குதிரை சவாரி செய்ய வேண்டும். என்பன அரச கட்டளைகள்.
இரண்டு கட்டளைகளை உடனே நிறைவேற்றி, மூன்றாவது கட்டளைக்கு அக்கினிக் குண்டம் வளர்த்து, குதிரை சவாரி செய்ய, நாளைக் கணக்கிட்டு, அந்நாளில் அக்கினிக் குதிரை சவாரி செய்ய, சபதம் எடுக்கிறார்.உடனே அரசு, ராயகண்டன் விருதையும், குதிரையையும் திரும்ப வாங்காது 3வது கட்டளையான அக்கினிக் குதிரை சவாரி செய்து நிறைவேற்றும்படிகேட்டுக்கொள்கிறது.விஜய நகரத்துக்கு அருகமையில், ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, ஒரு கல் நீளம், ஒரு கல் அகலம், கொண்ட சதுரப்பரப்பில் வேல மரங்களைக் கொண்டு அக்கினி வளர்க்கப்படுகிறது. ஓம குண்டத்திற்கு ஏற்பட்ட சாமான்களையும் இட்டு, ஒருமாதகாலம்அக்கினிவளர்க்கப்படுகிறது. கம்பளத்தார்களாகிய அனுப்பர் மரபு வந்த ஆண், பெண் அனைவரும் ஒரு மாத காலம் விரதம்மேற்கொள்கின்றனர்.
ஒருமாதம் நிறைவாகிய அந்நாளில், அந்த அக்கினியிலிருந்து அதிசய புரவி(குதிரை) ஒன்று தோன்றி, அக்கினியில் வலம் வந்து விளையாடியது. அப்பரியில் (குதிரை) சவாரி செய்யலாகாது, அது மந்திரத்தில் தோன்றியது என மல்லன் கூறி, வெண்கலக்குதிரை ஒன்று கம்மாளார்களால் அமைக்கப்பட்டு, அதை, அந்த அக்கினியில் வைத்து, தகதகவென தணல் பறக்கும் பொய்க்குதிரையில்தான் சவாரி செய்ய வேண்டும் என கொடுமன அமைச்சன் மல்லன் வஞ்சகமாக சூழ்ச்சி ஆணையிட்டான்.
அக்கினி வெண்கலக் குதிரையில் சவாரி செய்ய, ஸ்ரீ அருள்மிகு அட்டிய தொட்டயன், ஸ்ரீமதி ஒன்னம்மாள், ஸ்ரீ பொட்டிய தொட்டய்யன், ஸ்ரீமதி ஒன்னுக்கை ராமு இந்நால்வர்களுடன், அனுப்பர்குல மக்களாகிய பெண்டிற், அனைவரும், அருள்மிகு ஆண்டவன் மீது, இசைமிகு மங்களப்பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடவர்கள் அனைவரும் ஆதியில் ஏற்பட்ட உறுமி மேளம் முழங்க தேவராட்டம் எனும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டும், அந்த வேள்விக் குண்டத்தின் அக்கினியை வலம் வந்தனர்.
முதல் இரண்டு முறை, வலம் சுற்றி வந்தபோது அங்கு கூடியிருந்த விஜய நகர வேந்தனும், அவர்களது அமைச்சர்களும், பட்டத்து மங்கையர்களும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய்பேசாது திகைத்து நின்றனர்.
மூன்றாவது முறைம் சுற்றி வந்ததும், அரசனும், மனைவியர்களும், மல்லனும் அனுப்பர்களின் தெயவாற்றலை அறிந்து தங்கள் தவறினை உணர்ந்து அனுப்பர்களின் பாதங்கள் பணிந்து வணங்கி அக்கினியில் இறங்க வேண்டாம்! நாங்கள் உங்களை சோதனை செய்தது போதும்! எங்களை மன்னித்தருளுங்கள் என அழுது புலம்பி, கண்கலங்கி, வேதனையுடன் தடுத்தனர்.
அப்போது, அருள்மிகு ஒன்னம்மாள், அரசனை நோக்கி, “அன்புள்ள அண்ணா! எங்களைத் தடுக்க வேண்டாம்! உங்களுக்கு ஓர் ஆண்மகவு உதிக்கும், அவனுக்கு, பட்டம் கட்டி, நாட்டை அவனிடம் ஒப்புவித்துவிட்டு, நீங்களும் எங்கள் இருப்பிடம் வாருங்கள்” என்றும், அருள்மிகு, ஒன்னுக்கை ராமு, அரசனிடம், “எங்களது அன்புமிக்க ஐயா! தாங்கள் எங்களுக்கு அருளிய விருதுகள் அனைத்தும், என்றும், எங்கள் குல மக்களுக்கு இந்த பூமி உள்ளவரைக்கும் நிலைத்து நிற்க, ஒரு செப்பு பட்டயம் தீட்டிக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இத்துடன் அனுப்பர் குல மக்கள் அழுது புலம்பி அங்கலாய்த்தனர். அவர்களை நோக்கி ஸ்ரீமதி ஒன்னம்மாள்,“எங்கள் குல மாணிக்கங்களே! அனுப்பர் மரபு வந்த என் மக்களே!
நீங்கள் யாவரும், சொல்லிய வாக்கு தவறாதீர்கள், நல்லது செய்யுங்கள்.அந்த ஆதி சத்தியப்படி, ஸ்ரீ கண்ணபிரான் திருவருளால் நீங்கள் தொட்டது துலங்கும். உங்களுக்கு வந்த இடையூறும், அடுத்தவன் இட்ட சூதும் வாதும் விலகும். நீங்கள் நீடுழி வாழ்க!”
என ஆசி கூறி, அருள்மிகு ஸ்ரீமதி ஒன்னம்மாளும், அருள் மிகு ஸ்ரீ அட்டிய தொட்டராயரும் அக்கினியில் வந்த குதிரையில் ஏறியும், சூரிய பகவானால் அருளப்பட்ட குதிரையில், அருள்மிகு பொட்டிய தொட்டராயரும், அரசனால் வெண்கலத்தால் செய்யப்பட்டு, அக்கினியில் காய்ச்சி திப்பொறி பறக்கும் அக்கினிக் குதிரையில் அருள்மிகு ஸ்ரீமதி ஒன்னுக்கைராமுவும் ஏறி, சவாரி செய்து, அனைவரின் கண்முன் ஆகாயத்தில் பறந்து ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தனர்.
இச்சமுதாயத்திற்கு, நல்லது செய்வதையே, நாட்டை நிர்வாகம் செய்வதையே, தொழிலாகக் கொண்டு, சொல்லிய வாக்குத் தவறாத, உத்தமர்களாக வாழ்ந்து, மறைந்த, அல்லிகுல கம்பளத்தார்கள்தான், இன்று நாட்டில் வணங்கப்படும் தெய்வங்களாகமதுரை கள்ளழகர் மற்றும் உலகம் போற்றி வணங்கும் மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மனும் அல்லிகுல கம்பளத்தாரே!
பக்திச் சிரத்தையுடன் வணங்கப்படும் சங்கையா சுவாமியும், சுந்தர வள்ளியம்மனும், உத்தண்டராய சுவாமியும் அல்லி குல கம்பளத்தாரே!
ஆட்சிமுறை விஜய நகரப் பேரரசுக்கு தலைமை தாங்கி, ஆட்சி செய்த கம்பளத்து அல்லியர்கள் அரண்மனைப் பற்றி கணக்கெடுக்கும் போது, அறுபதுக்கும் மேற்பட்ட அரண்மனை கொண்டு ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது.
அரண்மனைகள் மதுரை மாவட்டத்திலுள்ள சிறுவாலை சமஸ்தானத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளன.கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அல்லிகுல கம்பளத்தார்கள் (ராயர்கள்) ஆட்சி செய்திருக்கிறார்கள்.
1. சிறுவாலை சமஸ்தானம் (பேரரசு)
2. கவுண்டன்கோட்டை அரண்மனை -மேலக்கோட்டை, நடுக்கோட்டை,கீழக்கோட்டை
3. நிலக்கோட்டை அரண்மனை
4. காளப்பன்பட்டி அரண்மனை
5. வதுவார்பட்டி அரண்மனை
6. கூத்திப்பாறை அரண்மனை
7. கவுண்டன்பட்டி அரண்மனை
8. பந்தல்குடி அரண்மனை
9. வெள்ளியங்குன்றம் அரண்மனை
10. புல்லணக்கவுண்டன்பட்டி அரண்மனை
11. வரதராஜபுரம் அரண்மனை
12. செக்காரக்குடி அரண்மனை – மேலச்சொக்காரக்குடி,நடுச்சொக்காரக்குடி,கீழச்சொக்காரக்குடி
13. போடுரெட்டியபட்டி அரண்மனை
14. சங்கரபாண்டியாபுரம் அரண்மனை
15. சன்னாசிபட்டி அரண்மனை
16. மாரனேரி அரண்மனை
17. திம்மராஜபுரம் அரண்மனை
- இப்படி அரண்மனைகள் ஆட்சி செய்திருக்கின்றன.
நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு, நமது அனுப்பக் குல மக்களின் சிறப்பு கருதி, மேற்சொன்ன மாவட்டங்களில் எல்லாம் (விசாரனை) ஸ்தல அதிகாரிகளாக, ஒவ்வொரு கிராமங்களிலும் அனுப்பக் கவுண்டர்களையே நியமணம் பண்ணின.சிறுவாலை அரண்மனையாளர்களின் பாரம்பரிய (கொடிவழிஜாப்தா) வாரிசுகள் பற்றிய விபரத்தினை 1823-ஆம் ஆண்டிலிருந்து கெஜட்டில் வைத்திருக்கின்றன வெள்ளைக்கார அரசு.ஆட்சி செய்த திருமலை நாயக்கருக்கு முன்பு, விஜய நகர பேரரசு தான், தெய்வ ஆலயங்களை நிர்மாணித்து சிறு தெய்வ வழிபாட்டிற்கு உறுதுணையாகவும் இருந்தது, நாட்டை நீதியுடனும், தெய்வீக சக்தியுடனும் ஆட்சி செய்தனர்.
“கம்பளத்தார்கள் இறந்தால் தெய்வமாக வருவார்கள்!
மாண்டால் மருளாடியாக வருவார்கள்! – என்பது ஒரு ஐதீகமாம்.
இதைச்சான்றாக்க, நினைவுச் சின்னமாக, நினைவுக்கல் அதாவது வீருகல் ஊன்றுகிறோம். உயிரோடு இருக்கும் போது தெய்வமாக வாழ்ந்தவர்கள், இறந்த பின்பும் தெய்வமாக இருக்கிறார்கள் என்பதை உலகத்தாருக்கு காட்டும்முகமாகத்தான் ‘வீருகல்’ ஊன்றுகிறார்கள். இருக்கும் ஜாதி அமைப்புகளிலேயே, அனுப்பக்கவுண்டர், அனுப்பச்சக்கிலியற், கம்பளத்து நாயக்கர் – இம்மூன்று ஜாதிகளுக்கு மட்டும்தான் ‘வீருகல்’ நடப்படுகிறது.
21 பந்தி – 64 சேனை சிறு தெய்வ வழி பாட்டின் உயிர் முடிச்சு இவைதான்.
‘தெய்வீக இராஜாங்க அதிபதி’ என்ற பட்டமும் சிறுவாலை சமஸ்தானத்து அரண்மனையாளருக்கு உண்டு. சிறுவாலை பட்டத்து ராஜாவுக்கு ‘ ஸ்ரீ அனுதொட்டராயன், அக்கினி பரிநகுலன், அனுமக்கொடி, கெருடக்கொடி, விருதுடையோன், பகல்தீவர்த்தி, திக் விஜய பிரதாப தெய்வீக இராஜாங்க அனுப்பரசு அல்லிகுல இராஜ மகுடாதிபதி, ராஜ ராய ராகுத்த கண்டன், இம்முடி வல்லவெட்டு அச்சுதராம்’ – என்ற பட்டங்களும், இளவரசருக்கு, மதுரை அழகரின் திருநாமங்களையும், அழகர் கோவிலின் விமானத்தின் திருநாமத்தையும் தாங்கி அச்சுதராம (அழகரின் புகழ் பாடும் நாமம்) சோமச்சந்திர (அழகர் விமானத்தின் பெயர்) சுந்தர ராஜ மூர்த்தி (அழகரின் உற்சவ மூர்த்தியின் பெயர்) பாண்டியர் என்ற பட்டங்களும் உண்டு.
அரண்மனையாரின் பரிவாரங்கள் இரண்டு விதமாக, நாட்டுக்கு ஒன்றும், ஜாதிக்கு ஒன்றுமாக இரண்டு பரிவாரங்கள் உண்டு.
சிறுவாலை சமஸ்தான இராஜாங்க பரிவாரம்
------------------------------------------------------------------------------
மஹாராஜா
இளைய மஹாராஜா
யுவராஜா
மாப்பிள்ளைக்கவுண்டர்
நாட்டாண்மைக்காரர்
கணக்குப்பிள்ளை
தானாபதிப்பிள்ளை
சம்பூதிரிப்பிள்ளை
பேஷ்காரப்பிள்ளை
பெருந்தனக்காரர் ,மணியக்காரர், காவல்காரர்
தண்டல்காரர்
சேர்வை வகையறா- தேவர் வகையறா
தச்சர் – கொல்லர்
வண்ணான் – குடிமகன்
மடையன்
தோட்டி
மாதாரி
சிறுவாலை சமஸ்தான அல்லிகுல பரிவாரம்
-----------------------------------------------------------------------------
அரண்மனையார்
கம்பளிகள்
குருக்கள்
பெருமாள்கோவில் பூசாரி
ஆவுக்காரன்
தின்னப்பெத்தன்
மானகாரன்
கட்டியக்காரன்
அல்லிகுல கம்பளத்தார்களின் ஒழுக்கமும், பக்தியும், சமுதாய உணர்வும் நாட்டை நல்லதொரு சூழ்நிலையில் வைந்திருந்தது. செழிப்பினையும், நீதியையும், நேர்மையையும், இரக்க உணர்வினையும் தழைத்தோங்கச் செய்தது.
மற்றும் உறவு முறை திருமண பந்த ஒழுக்கங்களுக்காக அறுபத்து நான்கு கிளைகள் அல்லது கோத்திரங்கள் அமைத்து சமூக உறவுகள் பிழை படாமல் காத்து வந்தனர்.
64 கிளைகள்.
--------------------
1. Govoru கோவோரு
2. Phottioru பொட்டியோரு
3. Kondioru கொண்டியோரு
4. Keyppathoru கெப்பதோரு
5. Konnaioru கொன்னையோரு
6. Katioru கட்டியோரு
7. Angathoru அங்கதோரு
8. Avinjoru அவிஞ்சோரு
9. Unakaioru உனைக்கையோரு
10. Sakkinoru சக்கினோரு
11. Surukioru சுருகியோரு
12. Pholioru போழியோரு
13. Palloru பள்ளோரு
14. Prinjoru பிரிஞ்சோரு
15. Pikkaloru பிக்கலோரு
16. Poochioru பூச்சியோரு
17. Beyrinioru பெரினியோரு
18. Bhocioru போசியோரு
19. Phokkithoru பொக்கிசோரு
20. Bellathoru பெல்லதோரு
21. Manthoru மந்தியோரு
22. Mannioru மன்னியோரு
23. Muppichoru முப்பிச்சோரு
24. Thumikiloru துமிக்கிலோரு
25. Thundathoru துண்டதோரு
26. Edanoru எடனோரு
27. Eymaioru எம்மையோரு
28. Thudikaloru துடிக்கலோரு
29. Thonnaioru தொன்னையோரு
30. Thombilioru தொம்பிலியொரு
31. Nannioru நன்னியோரு
32. Nonathoru நொனந்தோரு
33. Soloru சோளோரு
34. Santhanoru சந்தனோரு
35. Svudioru சவுடியோரு
36. Salakioru சலக்கியோரு
37. Sannoru சன்னோரு
38. Saanioru சானியோரு
39. Sallioru சல்லியோரு
40. Sangioru சங்கியோரு
41. Cikkaloru சிக்கலோரு
42. Kaalijoru காளிஜோரு
43. Kadijoru கடிஜோரு
44. Gonioru கோணியோரு
45. Akkalathoru அக்கலதோரு
46. Aavinoru ஆவினோரு
47. Aanaioru ஆனையோரு
48. Ulloru உள்ளோரு
49. Uraloru உரலோரு
50. Thuruvinoru துருவியோரு
51. Thupnathoru துப்ணதோரு
52. Thottioru தொட்டியோரு
53. Tharioru தாரியோரு
54. Egadoru எகடோரு
55. Eyrioru ஏரியோரு
56. Pannaioru பண்ணையோரு
57. Bhanoru பாணோரு
58. Patjoru பாட்ஜோரு
59. Maarijoru மாரிஜோரு
60. Edukkaloru இடுக்கலோரு
61. Omjoru ஓம்ஜோரு
62. Ramjoru ராம்ஜோரு
63. Nakkalathoru நக்கலதோரு
64. Dhasanoru தாசனோரு
இவை யனைத்தும் கன்னட மொழிச் சொற்களாகும். அல்லிகுல கம்பளத்தார்களின் வாய் மொழிச் சொற்கள், கன்னடச்சொற்கள்.
சகோதர உறவு
1 முதல் 32 முடிய மற்றும் 33 முதல் 64 முடிய உள்ளபிரிவினர்கள் சகோதர உறவு கொண்டவர்கள்.
சம்பந்த உறவு
1 முதல் 32 முடிய உள்ள பிரிவினர்கள், 33 முதல் 64 முடிய உள்ள பிரிவினரோடு சம்பந்த உறவு கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளது.
64 பிரிவினில் உள்ள தாசனோரு தங்கள் நேரடி திருமண உறவில் (பெண் எடுத்த/கொடுத்த உறவுகள்) சகோதர உறவுகளை தவிர்த்து மற்ற எல்லா பிரிவினர்களுடனும் சம்பந்தம் செய்யலாம்.
கிளைகள் ஒருங்கிணைப்புக்காக குல தெய்வங்கள் அடையாளமாக வரைமுறை செய்யப்பட்டன.காலத்தின் வேகத்தின் குலஒழுக்கங்கள் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
குலங்களும் தெய்வங்களும்.
-------------------------------------------------
கோவோரு குலதெய்வங்கள்
காமாட்சி, கொண்டம்மாள், சின்னம்மாள், வெள்ளையம்மாள், ரமாதேவி, நல்லம்மாள்
சோளோரு குலதெய்வம்
சென்னம்மாள்
சன்னோரு குலதெய்வம்
கோணியம்மாள்
உள்ளோரு குலதெய்வம்
மல்லம்மாள்
முப்பிச்சோரு குலதெய்வம்
பையம்மாள்
பாணோரு குலதெய்வங்கள்
சங்கம்மாள், சின்னம்மத்தாய், வீரகாளி
காளிஜோரு குலதெய்வம்
மாலைமுத்து
பெள்ளோரு குலதெய்வம்
தொட்டிச்சி, தேவம்மாள்
ஏரியோரு குலதெய்வம்
படமனத்தாய்
தாரியோரு குலதெய்வம்
வேலம்மாள்
துருவியோரு குலதெய்வம்
காளம்மாள்
அவிஞ்சோரு குலதெய்வம்
கெப்பம்மாள்
நொனத்தோரு குலதெய்வம்
பொம்மியம்மாள்
இடுக்கலோரு குலதெய்வங்கள்
ஒல்லியம்மாள், பண்ணம்மாள்
எகடோரு குலதெய்வம்
வீரவையம்மாள்
போழியோரு குலதெய்வம்
கொண்டத்துக்காளி, கொண்டு நல்லம்மாள், கொண்டம்மாள், பொன்னுசங்கர்
வணங்கப்பட்டு வருகின்றன.இப்படி மற்ற பிரிவுகளுக்கும் குலதெய்வங்கள் இருக்கின்றன.
மேலும், மொத்தமுள்ள 64 பிரிவினர்களடங்கிய அல்லிகுல கம்பளத்தார்கள் அனைவரும் கும்பிட வேண்டிய தெய்வம் கன்னிமார். தட்ஷிணாயணம் முடித்து, உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில், தைப்பொங்கலன்று, பட்டத்தரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜா கன்னி, வன கன்னி மற்றும் சுமனி கன்னி எனப்பட்ட கன்னிமார்களை வணங்க வேண்டும்.
அவரவர் இல்லத்தில் தைப்பொங்கலன்று மாலை 6 மணிக்கு மேல், வீட்டின் வாசற்புரம் ஒரு மூலையில், ஒரு சிறு குளம் தோண்டி 1அடி நீளம், 1அடி அகலம், 1அடி ஆழம் உள்ள குளம் தோண்டி, தோண்டிய மண்ணை கரையாக அமைத்து, கரைக்கு மேலே 7 கன்னிமார் சிலையை (6 கன்னிமார் சிறு சிறு கல்லினாலும், 1 கன்னிமார் மண்களியாலும் சிறிதாக பிடித்து) வடக்குப்பக்கம் பார்த்தோ, அல்லது கிழக்குப்பக்கம் பார்த்தோ வைக்கவேண்டும்.
குளத்தில் தண்ணீர் விட்டு, நவதானியம் போட்டு, பால் ஊற்றி மஞ்சள் கொத்தும், கரும்பும் வைத்து, பொங்கலிட வேண்டும். வீட்டில் பிறந்த மகளை அழைத்து வந்து, பொங்கலிட்டு கன்னிமாரை கும்பிட வேண்டும். பச்சை அரிசி (அவியலிடாத அரிசி) சாதமிட்டு, சாம்பார் வைத்து, பூசணிக்காயை கறியாக்கி வைத்து படையலிட வேண்டும். படையலிட்டு கும்பிடும் வரை யாருடனும் பேசக்கூடாது. கன்னிமாரை படையலிட்டு கும்பிட்டபிறகு, அந்த குளத்திலேயே கன்னிமாரை போட்டு மூடி விட வேண்டும்.
- இச்செய்தி(கன்னிமார் பற்றி) குளாங்குண்டு கம்பளி மேட்டு அதிபதியிடமிருந்து பெறப்பட்டது.
மேலும் தகவல்கக்ளுக்காக அனுப்பர் குல அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.உங்கள் செய்திகளுக்காக காத்திருக்கிறேன்.
அம்மன் அருளால் எதிர்வரும் பௌர்ணமியில்(25/12/2015)ஸ்ரீ ஒன்னம்மாள் வீரகாவியம் தொடங்க விழைந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அனுப்பர் குலமக்களின் ஆலோசனைகளுக்காகவும் அருள்மொழி ஆசிகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

நன்றி.
http://srionnammal.blogspot.in/
http://srionnammal.blogspot.in/
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment