கோல்லா (கொல்லவார்) பல்லவர்கள் :

கோல்லா (கொல்லவார்) பல்லவர்கள் :
----------------------------------------------------------------------------

#கோல்ல (#Goala)  இவர்கள் மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் கோல்ல, கோலா, குவாலா எனவும் அந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் #கொல்லவாரு என்றும் #கொல்லர் என்றும் அழைக்கப்படுபவர்கள்.

இவர்களின் உட்பிரிவுகளில்

* #பல்லவர்

* #பல்லவ_கோபர்

* #பல்லவ்

ஆகிய உட்பிரிவுகளும்

கோத்திரங்களில் #பரத்வாஜ_மகரிஷி கோத்திரத்தையும் கொண்டவர்கள் (பல்லவர்கள் கோத்திரம்).

மேற்கு வங்காளம், பீகார் ஆகிய ஆகிய மாநிலங்களில் பிரதானமான #சந்திர_வம்ச #யாதவ_குலத்தவராக இருக்கும் இவர்களின் பூர்வ மொழி சமஸ்கிருதம் + பிராக்கிருதம்..

இவர்களில் ஒருபிரிவினர் கி.பி.2 அல்லது கி.பி.3ம் நூற்றாண்டுகளில் பல்லவர் மன்னர்களின் மூதாதையர்களோடு வந்து ஆந்திராவில் குடியேறி இருக்கவேண்டும்.

இதற்கு சான்றுகளாக தெலுங்கு நிலப்பரப்பின் முற்கால சாசனங்களில் கொல்லவார்கள் கோல்ல என்றும் கோலா என்று குறிக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம்...

#குறும்ப_கொல்ல என அழைக்கப்படும் குறும்பர்களும் கொல்லவார்களின் உட்பிரிவினர்கள்.

வடக்கில் இருந்து தெற்கு வந்த #பல்லவர்கள் பேரரசசாக உருவாவதற்கு முன்பாக ஆந்திர மண்ணில் சாதவாகனர்களிடம் படைத்தலைவர்களாக விளங்கியவர்கள்.

பின்பு முதன்முதலாக தற்கால ஆந்திர  மாநிலத்தின் கிருஷ்ணா நதி முதல் பல்லாரி ராயலசீமை வரை அரசமைத்து ஆண்டவர்கள், பிற்காலத்தில் தான் தமிழ்நாட்டை கைப்பற்றினார்கள்.

இனி வரும் பதிவுகளில் பல்லவர்-கொல்லவார்/குறும்பர் தொடர்பையும், 
பல்லவர்கள் கொல்ல/குறும்ப குலத்தவர்களே என்பதற்கான கூறுகளையும் விரிவாக அலசுவோம்....

#Golla #Goala #Ayar #Kurumbagolla #Kurumbar

-

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு