தேவராட்டம்1
தேவராட்டம் (கிளிக்வீடியோ)
மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என்று கிராமியக் கலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் முன்தேர்குறுவை மற்றும் பின்தேர்குறுவை என்று இதற்குப் பெயர். மன்னரின் தேரின் முன்னும் பின்னும் போர் வீரர்களும் ஆடல் அணங்குகளும் வரிசையாக அணிவகுத்து ஆடி வருவார்கள். சமயங்களில் மன்னரும் தளபதிகளும்கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள்.
தேவர்களால் ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்பட்டு, வேட்டைத்தொழிலை அடிப்படையாக கொண்ட ராஜகம்பளம் சமூகத்தினரின் வாழ்வின் அங்கமாக தேவராட்டம் உள்ளது. தாங்கள் தேவர்களின் உண்மையான விசுவாசி என்று இந்த மக்கள் நம்பிவருவதால் தாங்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் என்று அழைத்து கொள்கிறார்கள் .இறைவனை வழிபடவும், வேட்டைக்கு செல்லும் போது பாவனையாகவும், மழை, திருமணம் மற்ற விசேஷங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
Comments
Post a Comment