விஜயநகர சாம்ராஜ்ஜியம் (Vijayanagara Empire)
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.
Comments
Post a Comment