Kattamaraju's Inscription 3 - Yadava Kshatriya victory
காட்டமராஜூ கல்வெட்டுகள் 4 - யாதவ க்ஷத்திரியர்களின் வெற்றி
கண்டுகூர் கல்வெட்டின் 4ம் பக்கம்:-

வருடம்:- கிபி. 1258 - 1259
சாலிவாக சகிப்தம்:- சக வருடம் 1180 - 1181
கல்வெட்டில் உள்ள மொழி:- கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துக்களும் தெலுங்கிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.
ஆட்சிக்காலம்:- காகத்திய மகா பேரரசர் கணபதி தேவுடு (கணபதி தேவர்).
பொருள்:- காட்டமராஜூவின் வம்ச பூர்வீக விவரங்களை விரிவாகக் கூறும் குண்டலபாலெம் பிரம்மரேஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டு.


1, ஸ்வசி ஸ்ரீ ஸாலிவாஹன ஸகவ
2, ர்ஷம்ப்புலு 1170 அகுனெம்
3, ட காளயுக்தி சம்வத்சர கார்திக
4, ஸு 5 கு நெல்லூரி நலசித்திராஜு சர்வ
5, சென்னஹம் மெரசி ౹ லிங்காலகொண்ட யறக
6, ட்டபாடி கூடலி சோமேஸ்வருனி சந்தலின
7, நான ஆத்ரேயகோத்ர யாதவக்ஷத்ரி
8, ய மதுராபுரமன் திவ்யஸ்ரீ பா
9, விஷ்ணுயோகமாய திவ்யஸ்ரீ பா
10, தக ப்ரிகட ஸாத்ரவபஞ்ஜனனச்செரபுந்தி
11, பௌத்ரலாயத்தவங் கௌரவ பௌரவு
12, ன்து த்வாரகாபுரி கோபிகாவல்லபு
13, நி பௌத்ருன்டு வல்லராஜுலதனி சு
14, துலு போலுராஜு பெத்துராஜு வா
15, ரிபுத்ருலு மோதலைன யாதவுலு
16, நலசித்திங்கூடி யுத்தமு
17, சேசி ம்ருதுலைரி ౹ யதுவம்ஸ
18, முனகு பயம்ப்புதொலுகுனனி த்ரிமூ
19, ர்துர்லு யோகமாயா தேவினி யிட்ட
20, நிரி கோபிகாஜனமுலு கோபாலகு
21, லுன்ன பசலமந்த்தகு நேங்கு பத்ர
22, னீபு வசுதேவனம்தனுலகு கர்பபு
23, த்ரிகவை நாநாவித சம்ப்ரதலகு ஸ்தா
24, னக மை மானவுலு பக்திங்கோலுது
25, ரு கானுகலுனு பலுலு நிச்சி பத்தெ
26, னிமிதி நாமன்ப்புல கொனியாடு
27, துரு இய்யாஸ்தனம்புலு யெ
28, ரிங்கின்ச்சி புமிபிடாவுரி ஹேன்க்ருதித
29, னுவு கொண்ட்டம் ப்ரித்யஸ்ரக்ஷமை ౹ பாலேடி
30, தீரம்முன பாகிரலைனிலிசி பக்துனிகி
31, ப்ரத்யஸ்ரக்ஷமை த்ரிமூர்துல மெப்பின்சி வீ
32, ர மஹாத்து இப்பிம் சேனு பாகிரதி துர்க
33, ஸ்தானம் கொண்டய்யகொடுகு ரா
34, மய்ய புத்தரின்சின ஸாசனம் ౹౹౹
கல்வெட்டு கூறும் செய்தி:-

வணக்கம்! பிரகாசமான கோட்டையின் 5ம் நாளான வியாழக்கிழமை. சாலிவாஹன சக சகாப்தத்தின் 1170 ஆம் ஆண்டுக்கு ஒத்த காலயுக்தி ஆண்டின் கார்த்திகை மாதத்தின் இரவு, நெல்லூரைச் சேர்ந்த நலசித்தி ராஜு ஒரு பெரும் படையுடன் எர்ரகட்டபாடை தாக்க முன்னேறியபோது, அவரை எதிர்த்து யாதவ க்ஷத்ரிய குலத்தில் பிறந்து, மதுராபுரியின் அதிபதியான ஸ்ரீ விஷ்ணு யோகமாயாவின் தெய்வீக திருவடிகளை தொழுது அத்தெய்வத்தின் வம்சாவழியில் வந்தவரான ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த வலு ராஜு, எதிரிகளை அழிப்பவர், துவாரகையின் கோபிகவல்லபனிலிருந்து வந்தவர் மற்றும் பிரசித்திப்பெற்ற புருவின் வம்சத்தை சேர்ந்தவர், மற்றும் அவரது மகன்களான போலு ராஜு மற்றும் பெத்திராஜுவும், மேலும் இவர்களது மகன்களும் (காட்டமராஜூ உள்பட), பிற யாதவர்களும் சித்தி ராஜுவை லிங்கலகொண்டா மற்றும் எர்ரகட்டப்பாடு சந்திப்பு எல்லையில் சோமேஸ்வர பெருமான் (சிவன்) முன்னிலையில் போர்க்களத்தில் சந்தித்து வெற்றிக்கொடி நாட்டி நல்லசித்திராஜுவை அழிந்தனர்.
யாதவர்களின் பயத்தை அகற்றுவதற்காக, திரிமூர்த்திகள் (மும்மூர்த்திகள்) யோகமாயா (ஆதிபராசக்தி) தெய்வத்திடம் இவ்வாறு கோரிக்கை வைத்தனர்: - ஓ பத்ரையே! நீங்கள் கோபிகைகள் மற்றும் கோபாலர்களின் ஆநிரை மந்தைகளுக்குச் செல்வது நல்லது. வசுதேவர் மற்றும் நந்தகோபரின் மகளாக மாறி, நீங்கள் அவர்களுக்கு அதிக செழிப்பை அருள்பவராக இருப்பீர்கள், மேலும் ஆண்களாலும் வணங்கப்படுவீர்கள். அவர்கள் உங்களுக்கு காணிக்கைகளை கொடுத்து வேள்விகளை செய்வார்கள், பதினெட்டு திருநாமங்களில் (பெயர்கள்) உங்களைப் துதிப்பார்கள்.
இக்கல்வெட்டின் இறுதியில் "பல திருக்கோவில்களை எழுப்பி பல்வேறு திருநாமங்களில் போற்றப்படுகிறாள். அவள் பித்தாப்பூரில் ஹேம்கிருதி என்று அழைக்கப்படுகிறாள்; அவள் தனமுகொண்டாவில் தோன்றினாள்; அவள் பாலேருவின் கரையில் பகீரதி (கங்கையம்மன்) என்று அழைக்கப்படுகிறாள்; அவளின் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் மற்றும் திரிமூர்த்திகளுக்கு கொடுத்த வாக்கின் காரணமாகவும் தேவி இங்கே தோன்றியுள்ளார் ". ' (இது) பகீரதி துர்காவின் புனித தலம்'. இந்த அரசாணையை கல்வெட்டில் உளிக்கொண்டு பொறித்தவர் கொண்டய்யாவின் மகன் ராமையா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு:-
* இக்கல்வெட்டில் காட்டமராஜூவின் வம்ச கோத்திரமாக தெரிவிக்கப்படும் ஆத்ரேய மகரிஷி கோத்திரமே, விஜயநகரத்தை ஆண்ட நான்காம் வம்சமான ஆரவீட்டு வம்சத்தின் கோத்திரமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
* இக்கல்வெட்டின் மற்றொரு மாபெரும் சிறப்பு யாதெனில், கொல்லவாருகளை யாதவ க்ஷத்திரியர்கள் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டை சான்றாகக் கொண்டு, கொல்லவாரு குலத்தவர்கள் 4 வர்ணங்களில் க்ஷத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment