Kattamaraju's inscription 2- War history

காட்டமராஜூ கல்வெட்டுகள் 2 - காட்டமராஜு யுத்தம்

கண்டுகூர் கல்வெட்டின் 3ம் பக்கம்:-

மகாராஜா யயாதி 

வருடம்:-  கிபி. 1258 - 1259

சாலிவாக சகிப்தம்:-  சக வருடம் 1180 - 1181

கல்வெட்டில் உள்ள மொழி:-  கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துக்களும் தெலுங்கிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்காலம்:-  காகத்திய மகா பேரரசர் கணபதி தேவுடு (கணபதி தேவர்). 

பொருள்:-   காட்டமராஜூவின் வம்ச பூர்வீக விவரங்களை விரிவாகக் கூறும் குண்டலபாலெம் பிரம்மரேஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டு.

கல்வெட்டு வரிகள்:-

1, அத்ரியெமனி சந்ததிராஜுலு யெ

2, லினபட்டிண பூமுலு அத்ரிய நெத்ரபுத்ருடு

3, பூலோக மெல்லாடிபின் செனு ஆசந்த்ரநந்த

4, னுபுத்ரு புரூரவுன்ட்டு பூசக்ரமெல யே

5, லெனு ஆ புரூரவ புத்ரபௌத்ருன்டு யயா

6, திராஜுயை நவகண்ட வ்ருதிவியேலெ யயா

7, திபுத்ருன்டு யதுவுயேனாக பூமுலு

8, யெலெம யெகுலோம்த்மஜு நூரஸேனு மது

9, ர மாதுரம்புலு சூரசேனன்புலனியெடி தேஸ

10, ம்புலு யேலெனு ஆதனி ஆன்த்மஜுன்டு வசுதேவு

11, மதுராபுரம்பு யேலெ அதனி பந்துவு

12, நந்தகோபகுன்டு ரேபுபல்லே யேலெ வசு

13, தேவு புத்ரு ஸ்ரீகிருஷ்ணுத்வாரவதி யேலேனொ

14, கிருஷ்ணுகோபிகாபபுத்ருலு வஜ்ரதரு அ

15, ம்ருத கோவிந்து அம்போஜு லார்குரு

16, யிந்த்ரப்ரஸ்த குனவீரபுரிராஜ்யம்பு

17, சேஸிரி பத்மநாபுன்டு யெ லெ யந்த்தலி

18, ராஜ்யம்பு கொண்தயெ லெ ౹ வீரவிஜயு

19, ன்டு யேலெனு ன ౹ ஸ்ரீகூர்ம்முன்டேலெனு அ

20, ருன்டுல கோண அமரவதி ౹ சிம்ஹ்யாத்ரியெ

21, ல மன்ச்சி யேலெனு வல்லுராஜுலெ ஆலவல்ல

22, புரமு அசட கொன்னூள்ளு அடிதெவி டே லெ

23, னு ஆலபோலுராஜு ப்ரதாபுனி காலமு

24, ன யெதுகுலா த்மஜுலு தனுமுகொண்ட்ட

25, மந்தலுட, பினயெர்ப பெதயெர்ப யேலம்

26, க யெர்பலகு அனாவ்ரிஷ்டிதான்கி தேனுபு

27, லகு மேன்தலேதனி ரார்ஜு பத்மநாயு

28, ர்டு விவரின்ச்சுகொனி தெனுவுர்லு தாரு

29, கதிலிரி பாங்கநாடு சித்திராஜுகு பு

30, ல்லரி வொடம்படி பூமிசொச்சி மேபிரி ౹ மெ

31, புதனலு நன்ன தேனுபுலுந்தானு தக்ஷணாதனு வு

32, கோடிகி கதலி போயிதனுவு கோ வல்லபுனி தனுபுகோவல்ல புனிதர்ஸி

33, ன்ச்சி நலனன்னி தேனுவுலுன்தானு மரிலி தினநிதுல

34, மீன்தம் கதிலிவச்சி பென்ன வென்ட விடிஸரி நலசி

35, த்திவாரு யெத்துல யெசிரியாதவுலவன்தனு ஆன்டம்

36, தருசாய அடவுல வங்க்க ரன்துவடெ

37, நெல்லூர தேனுபுலுன்தாரு கதிலிய

38, றகட்ட பாடநிலி செனு நலசித்திராய

39, பாரிவுல்லரிகிவச்செனு தட்டின்ச்சி ராய

40, பாரினி புல்லரிலேது பொம்மனிரி லேது பொ

41, ம்மன்டேனு நெல்லூரி நலசித்திராஜு யற

42, கட்ட பாடிகி யெ த்திவச்சினு ౹౹

கல்வெட்டு கூறும் செய்தி:-

அத்ரி மகரிஷி

அத்ரி மகரிஷியின்யின் சந்ததியினரால் நகரங்களும் நாடுகளும் ஆளப்பட்ட  : அத்ரியின் கண்ணிலிருந்து பிறந்த மகன் (அதாவது சந்திர தேவர்) உலகம் முழுவதையும் ஆண்டார். சந்திரனின் பேரனான புரூரவர் பூவுலகெங்கும் ஆட்சி செய்தார். புரூரவ சக்ரவர்தியின் மகனின் பேரன் யயாதி பேரரசராகி ஒன்பது கண்டங்களை உள்ளடக்கிய பூமியை ஆண்டார். யயதியின் மகன் யது தேவலோக சொர்க்கத்தை  ஆட்சி செய்தார், யது வம்ச வழிவந்த சூரசேனர் மதுராவை தலைநகராகக் கொண்டு மதுரா மற்றும் சூரசேனம் என அழைக்கப்படுகின்ற நாடுகளை ஆண்டார். இவரது மகன் வசுதேவர் மதுரா நகரை செழிப்புடன் ஆட்சி செய்தார். நந்தா கோபர், வசுதேவரின் உறவினர், ரப்பள்ளியை ஆண்டார். வசுதேவரின் புத்திரனான ஸ்ரீ கிருஷ்ணர், துவாரவதியை (துவாரகை) ஆண்டார். 

பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் 

ஸ்ரீ கிருஷ்ணருக்கும் கோபிகைகளுக்கும் பிறந்த மகன்களான, வஜ்ரதரன், அமிர்த கோவிந்தன் மற்றும் ஆறு அம்போஜர்களும் இந்திரப்பிரஸ்தம் மற்றும் கானவீராப்பூர் ராஜ்ஜியத்தை ஆண்டனர். பத்மநாபர் அந்த ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார். வரவிஜயா மற்றொரு பகுதியை ஆட்சி செய்தார். ஸ்ரீ குர்மர் அருந்துலகோணம், அமராவதி, சிம்ஹாத்ரி மற்றும் எலமஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்டார். வல்லுராஜு சிறிது காலம் ஆலவலப்பூர் (கனிகிரியில் உள்ள ஆவலப்பாடு நகரமாக இருக்கலாம்) மற்றும் ஆதிதேவிதி (?) ஆகிய நகரங்களை ஆட்சி செய்தார். காகத்திய பேரரசர் முதலாம் பிரதாபனின் (ருத்ரதேவன்) காலத்தில், யதுவின் வம்சாவளியான ஆல போலு ராஜு, பெத்த எரப்பை மற்றும் பின்ன எரப்பை ஆகிய ஊர்களை ஆண்டுக்கொண்டிருக்கும் போது, ​​தனமுகொண்டாவில் தனது மந்தையை வைத்து பராமரித்துக் கொண்டிருந்தார், எரப்பை கிராமத்தில் நிலவி வந்த கடும் வறட்சியின் காரணமாக மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்கள் இல்லை என்பதைக் முன்கூட்டியே நலசித்தி ராஜு மற்றும் அமைச்சர் பத்மநாயுடுவும் அறிந்திருந்தனர். எனவே காட்டமராஜு, அவரது மாடுகளுடன் பாகநாட்டுக்கு (நெல்லூர்) குடிபெயர்ந்து, வந்து சித்தி ராஜுவுக்கு புல்லாரி (மேய்ச்சல் வரிக் கட்டணம்) செலுத்த நலசித்திராஜுவிடம் ஒப்புக்கொண்டார். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மன்னர் நலசித்திராஜு, காட்டமராஜுவுக்கு அவரது மாடுகளை தங்களது நாட்டில் மேய்ச்சல் செய்ய ஒப்புக்கொண்டதால், காட்டமராஜு நெல்லூரின் நிலங்களில் நுழைந்து தனது பசுக்கள் மற்றும் எருதுகளை மேய்த்துக் கொண்டார். மேய்ச்சலில் இருந்த மாடுகளுடன், அவர் தெற்கில் தனுகோட்டியை நோக்கிச் சென்று அதன் ஆட்சியாளரான நல சித்திராஜுவை சந்தித்தார். பிறகு அங்கிருந்து மாடுகளுடன் ஆறுகள் மற்றும் மலைகளை எல்லாம் கடந்து வந்து, அவர்கள் பென்னை ஆற்றின் (பென்னாறு) கரையில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டார்.  இதனால் கோபம் கொண்ட நல சித்தி ராஜு, காட்டமராஜுவின் பசுக்கள் மற்றும் எருதுகளை தாக்கினார். நல சித்திராஜு ஒப்பந்தத்தை மீறிய காரணத்தினால் நெல்லூரை விட்டுவிட்டு காடுகளின் வழியே பயணித்து, இடையில் மரங்களின் நிழலில் ஓய்வெடுத்து, தங்கள் மாடுகளுடன் தனது ஆட்சிப்பகுதியான எர்ரகட்டப்பாடிற்கு திரும்பிவிட்டனர் காட்டமராஜு. இதன்விளைவாக நல சித்தி ராஜுவின் தூதர் புல்லாரி வரி கோர எர்ரகட்டப்பாடு அவைக்கு வந்து காட்டமராஜுவை சந்தித்தார். ஆனால் புல்லாரி வரி செலுத்த காட்டமராஜு கடுமையாக மறுத்துவிட்டனர்.

பென்னாறு

மேலும் அரசவைக்கு வந்த நெல்லூர் தூதுவரை வெளியேறச் சொன்னார் காட்டமராஜு. மேய்ச்சல் வரி கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபம் கொண்ட நெல்லூர் மன்னர் நல சித்தி ராஜு, எர்ரகட்டபாடின் மீது படையெடுப்பை மேற்கொண்டார்.

குறிப்பு:-

அத்ரி மகரிஷி சந்திர தேவரின் தந்தை மட்டுமல்லாமல் சந்திர மகா வம்சத்தின் மூல புருஷரும் இவரே ஆவார். இவரின் துணைவியார் அனுஷ்யா தேவி. இவருக்கு சந்திர தேவரை தவிர்த்து துர்வாசர் மற்றும் மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயர் ஆகிய மகன்களும் உண்டு. வேதங்களில் குறிப்பிடப்படும் சப்த மகா ரிஷிகளில் அத்ரி மகாமுனிவரும் ஒருவர்.

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு

ஊமைத்துரை சிறை மீட்பு, பாளையங்கோட்டை சிறை தகர்ப்பு

1755 - British expedition in Madura and Tinnevelly- Colonel.Heron