Kattamaraju's Inscription 1 - Kattamaraju belongs to Golla Yadava vamsam

காட்டமராஜூ கல்வெட்டுகள் 1 - யாதவர் (கொல்லவார்) பூர்வம்

கண்டுகூர் கல்வெட்டின் 1ம் பக்கம்:-

மகாவிஷ்ணு

வருடம்:-  கிபி. 1258 - 1259

சாலிவாக சகிப்தம்:-  சக வருடம் 1180 - 1181

கல்வெட்டில் உள்ள மொழி:-  கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துக்களும் தெலுங்கிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்காலம்:-  காகத்திய மகா பேரரசர் கணபதி தேவுடு (கணபதி தேவர்). 

பொருள்:-   காட்டமராஜூவின் வம்ச பூர்வீக விவரங்களை விரிவாகக் கூறும் குண்டலபாலெம் பிரம்மரேஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டு.

கல்வெட்டு வரிகள்:-

1, யாதவஜல்மம் வைஷம்பா

2, யிண்டு பரீக்ஷ்யத்துகுயி

3. ட்ல எ அதிதிகீ காஷ்யபுனகு புட்டி

4, ன வைவஸ்துண்டனு மனுபுனகு

5, யமுண்டுனு ஸனேஸ்வருன்

6, ட்டு யமுணயுந்தபதியும்

7, புட்டி ரந்து வைவஸ்துண்டனு மனு

8, புவலன ப்ரம்ம க்ஷத்ரிய வைஸ்யனு

9, த்ருலைண மானவுலு அனேகுலு பு

10, புட்டிரி. வாரிகி ஷேனப்ரமுகலைன ராஜூலு

11, யணமன்ட்ரு புட்டிரி । ஆ முனிபுத்ரி ஐ

12, ன யிலகண்ய சோமபுத்ருண்டைன புது

13, னகு புருரவ சக்ரவர்த்தி புட்டே புரூரவு

14, னகு பூர்வசிகி நாயுபுன்டு புட்டே நா

15, யபுணர்கு ஸ்வர்பாயுக்ர நபிகண்டு பு

16, ட்டெ ராஜ்யம்புசேஸே நபிகணர்கு  ப்ரியமேனு

17, நர்கு யயாதி புட்டி யணாகயாகம்புலு. சேசெ

18, னு யயாதிகினி ஸ்ருகுனி புத்ரியைன. தேவயான

19, ர்கு யதுவு  ஜன்மின்சேனு ౹ ஸிலமுகல யதுகுலாத்ம 

20, ஜான்டு யாத்ரியகோத்ரஜூன்ட்டு ஆ சூரூனு

21, ன்டனு வான்டு  மதுராபுரம்ப்பும் தனகு ராஜதாணி 

22, காமாதுரம்புலு சூரசேனம்புலனியெடி தேஸம்  லேலெ பூ

23, ர்வகாலமுன ஆனூரு னுனிகி புத்ரும் வசுதேவுன்டு அசட

24, ராஜேன்ந்வினுதொல்லி ராஜலான்ச்பனம்தோ வேல

25, சங்க்யலு ரைத்யவிபுலுன்தன்னு ౹ ஆக்ரமின்ச்சின பூமிபா

26, ரமாநன்ஜாலகு கோரூபுயை பரஹ்மம்ஜேரன்போயி க

27, ன்னிரு முன்னீரு ரோதனம் ஸாய கருணதோ  பாவின்சி ౹ கம

28, லபபுண்டு தரணி நூரடம் பக்லி தாத்ரியுனு வேல்புலுக

29, தாலிரா விஷ்ணுனிம்கானநெங்கி புருஷ சூக்தம்பு சதவி ய

30, த்புத சமாதினுன்டி யொக மான்டவினி வாரிஜோத்ப பு

31, ன்ட்டு வினுன்டு வேல்புலு தரயுனு நேவின்ன யெட்டி  பலுகுனிவரின்செத

32, நனி ப்ரிதிம்பலிகென்தெலிய யாதவகுலமுன நமருலுமெ

33, பைம் புட்டம் ஜனுன்டு மீயன்ஸமுநன் ౹ ஸ்ரீதைத்யுன்டு வசுதேவு

34, நகாதரமுணம் புட்டிபாரமம்த்தயுன்பாபுனு ஹரிபூஜா 

35, புட்டுன்டு சுரகண்யலு பூமியந்து சுந்தரதனுலைஹரி

36, ன்டை ஸேஷுன்டு ஹரிகலலொம்புட்டி பாரமந்தயம் பா அவணீ

37. ஸ வினு த்ரோணுன்டவான்டு வசுபுலயந்து முக்யண்டு அ

38, தனி பார்ய ஆவெல்புல பெத்த ஆ த்ரோணுன்டு யா நந்த்தகுன்டைன ஜன்மி 

39, ன்செ தாரயிய்ய ஹரி யோகமாய யஸோதநந்துகடுகாயை ஜே

40, ல்மன்செ யல்லதேனவலெல்ல ருஷுப அம்ஸமுன ஜன்மின்செ சுரலெல்ல கோரக்ஷ

41, பாலகுலைஜல்மின்ச்செ தேவகியனு தொல்லி ஸ்வாயம்புமனு நதரம்பு

42, ன புஸ்தியுனுப்ரதிப்ரத நசுதேபும்ட்டனு சுதுபுண்யண்டனுப்ஜாப

43, தி ரென்டவஜன்மமுன அதிதியுந்காஷ்யபுன்டுனு மான்டுபஜன்மமுன

44, வசுதேவ தேவகி ராமகிருஷ்ணுலு புத்பவின்சிரி அக்ஷராங்கனலு கோபகன்யலை பு

45, தயின்சிரி ராமகிருஷ்ணுலு மொதலைன சர்வயாதவகோபுலு கோபாலக்லு த்வாபார அ

46, ன்த்யமுன கூடவர்தின்ச்சி அசடங்கோணாள்ளு ౹ துர்யோதனாதுலம் த்ருன்ச்சி பான்ட்ட

47, வுல வரக பட்டம்புகட்டி சந்தோஷம்மு வச்செ த்வாரகாபுரிகிகண்வ மஹிமு

48, னுல காந்தாரிஸாபம்வம்கனு முனுகொனி யன்னம்க முவ்வதியாரு வர்ஸமுலு

49, ஸ்ரீ கிருன்ஷ்ணு மோதலைன ஸர்வ யாதவுலு ராஜ்யம்பு சேசிரி ౹ ஸய்யம் கனொக்கநான்டு

50, புத்பாதமுலு வொடிமெ புர்வீஸுபம்புன ౹ ஜாதரலு ஸய்யனு த்வாரபதி

51, கதிலிரி ஸ்ரீகிருஷ்ணுயாதவுலு சமுத்ருனி கடகு ஜலதீர முன சவபா

52, நமத்துலை விஷ்ணு போஜான்த்தக வீருலெல்ல முனிவர னிர்திஸ்ட முச நிர்திஸ்டமுச

53, லான் த்மக்ருமுலைன முய்யம்ச்சுதுன்க்கல மோன்துலாடிம்ரி

54, துலைரி அந்த தாரகுன்டு சனி பாம்டவுல கெரிங்கி

55, ன்செ ౹౹౹

கல்வெட்டு கூறும் செய்தி:-

மகாராஜா பரிக்ஷித் 

யாதவ குலத்தின் தோற்றம் பற்றி வைசயம்பயண மாமுனிவர், மாமன்னர் பரிக்ஷித்திடம் இவ்வாறு விவரித்தார்:

யமதர்மர், சனீஸ்வரர், ஜமுனா (யமுனை), தபதி (தப்தி), மற்றும் வைஸ்வத மனு ஆகியோர் அதிதி மற்றும் காஸ்யப மகரிஷியின் மகனான சூரியதேவருக்கு பிறந்தவர்கள். பல மனிதக் குலங்கள், அதாவது, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள், வைஸ்வத மனுவால் படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எட்டு மன்னர்கள் வேனா உள்பட மற்றவர்களும் பிறந்தார்கள். புருரவ சக்கரவர்த்தி இந்த மனுவின்  மகளான இலாதேவிக்கும் சோம தேவரின் (சந்திரன்) மகனான புதன் பகவானுக்கும் பிறந்தார். 

புரூரவன் மற்றும் ஊர்வசிக்கு ஆயு பிறந்தவர். 

ஆயு மற்றும் ஸ்வரபானுவுக்கு மகனாக நஹுஷன் பிறந்து ராஜ்ஜியத்தை ஆண்டார்.

 நஹுஷன் மற்றும் பிரியமனை (பிரியமவத்தை) ஆகியோருக்கு மாமன்னர் யயாதி பிறந்து தனது வாழ்நாளில் பல புண்ணிய யாகங்களை செய்தார். 

இந்த யயாதி மற்றும் சுக்கிராச்சாரியரின் மகளான தேவயானைக்கு யது பிறந்தார்.

வசுதேவர் - தேவகி - ஸ்ரீ கிருஷ்ணன் 

உன்னதமான யது குலத்தின் வம்சாவளியாக சூரசேனர், ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்து மதுராவை தனது தலைநகராகக் கொண்டு, சூரசேனா மற்றும் மதுரா ஆகிய நாட்டை ஆண்டார். அதுபோல, சூரசேனரின் மகன் வசுதேவரின் காலத்தில், அசுரர்களின் (அரக்கர்கள்) தலைவர்களில் பல்லாயிரம் பேர், இந்த பூமியை மன்னர் என்கின்ற பெயரோடு ஆக்கிரமித்து அரசாட்சி செய்துக்கொண்டிருந்தனர் ; எனவே அவர்களால் பூவுலகில் நிகழ்த்தப்படும் அநியாய அக்கிரமங்களின் சுமையை தாங்க முடியாமல் பூமாதேவி ஒரு பசு வடிவில் பிரம்மதேவரிடம் சென்று கண்ணீர் விட்டு அழுதாள். பிரம்மதேவர் அவள் மீது இரக்கம் கொண்டு வைகுண்டத்தில் பள்ளிக்கொண்டுள்ள மகாவிஷ்ணுவிடம் சென்றார், அவருடன் பூமாதேவியும், தேவர்களும் தெய்வங்களும் உடன் சென்றனர். பாற்கடலில் சயனம் கொண்டிருந்தார். புருஷசுக்தத்தில் இருந்த சுலோகத்தை (ரிக் வேதத்தின் ஒரு சுலோகம்) தேவர்களும், பூமாதேவியும் கோஷமிட்டுக்கொண்டிருக்க சயனக்கோலத்தில் தவநிலையில் ஆழ்ந்திருந்தார் நாராயணன். அப்போது ஸ்ரீமன் நாராயணன் ஒரு அற்புதமான தெய்வீகக் குரலைக் கேட்டார். பின்னர் அவர் கேட்டதை, தெய்வங்களுக்கும், பூமி தெய்வத்திற்கும் விளக்கினார்: - "ஓ தேவர்களே, யாதவ வம்சத்தில் உங்கள் தெய்வீக சக்தியுடன் பூமியில் நீங்கள் அவதாரம் எடுங்கள்; ஸ்ரீதேவியின் (மகாலக்ஷ்மி) கணவனான ஸ்ரீ விஷ்ணு பகவான் வசுதேவரிடம் பிறப்பேன் , பூமியை அவளது சுமையிலிருந்து விடுவிப்பேன். ஓ வானங்களே, ஸ்ரீ ஹரியை வணங்குவதற்காக அழகிய இளம் மங்கையர்களாக பூமியில் அவதாரம் எடுப்பீர்கள். ஆதிசேஷன் அசுரர்களிடம் அகப்பட்டுள்ள உன்னதமான பூமியை விடுவிப்பதற்காக ஸ்ரீ ஹரியின் மூத்த சகோதரனாக அவதாரம் எடுப்பார்". " பூமியின் தெய்வமாகிய! பூமாதேவியே கேள். துரோணதேவர் தேவதைகளின் தலைவரானவர்; தாரா தேவி அவருடைய மனைவி. தெய்வங்களின் தலைவரான இந்த துரோணதேவர் தற்போது பூலோகத்தில் நந்த கோபராகப் பிறந்துள்ளார், மேலும் தாரா தேவி, யாசோதாதேவி மற்றும் நந்தகோபர் தம்பதியினரின் மகளான யோகமாயாவாக பிறந்துள்ளார். அனைத்து மாடுகளும் ரிஷிகளின் சக்தியால் உருவாக்கம் செய்யப்பட்டன. அனைத்து கடவுள்களும் பசுக்களை காக்கும் கோபாலர்களாக பிறந்துள்ளனர். ஸ்வயம்பவ-மன்வந்தர என்னும் புண்ணியக் காலத்தில் வசுதேவர், சுதாப்புண்யர் என அழைக்கபடும் பிரஜாபதியாக பிறந்தார். மேலும் வசுதேவரின் மனைவியான தேவகி தேவி, பிருஸ்னி என்று அழைக்கப்படும் சுதாப்புண்ய பிரஜாபதியின் தர்மபத்தினியாகப் பிறந்தார். இவர்களின் இரண்டாவது ஜன்மப் பிறப்பில் அதிதி தேவி மற்றும் மகாமுனி காசியபராக பிறந்தனர் அவர்களின் மூன்றாவது பிறப்பில் அவர்கள் வாசுதேவர் மற்றும் தேவகியாக பிறந்திருக்கிறார்கள்" எனக் கூறி முடித்தார் எம்பெருமான் நாராயணன்.

யசோதா தேவி - ஸ்ரீ கிருஷ்ணன் - நந்தகோபர்

 மேலும் அவர்களுக்கு ராமபிரானும், கிருஷ்ணரும் பிறந்தார்கள். அப்சரஸ்கள் (வானுலக தேவதைகள்) கோக்களை காக்கும் கோபாலர்களின் மகள்களாக பிறந்தவர்கள். ராமர் ​​மற்றும் கிருஷ்ணர் உட்பட அனைத்து யாதவர்களும், மாடுகள் மற்றும் பசுக்களுடன் சேர்ந்து, துவாபரயுகத்தின் இறுதி வரை செழித்து வளர்ந்தனர். பாரதப்போரில் துரியாதனனையும் மற்ற கௌரவர்களையும் அழித்து, பாண்டவர்களை அஸ்தினாபுரத்தின் அரியணையில் நிறுவிய பின்னர், கிருஷ்ண பகவானும் யாதவர்களும் மகிழ்ச்சியுடன் துவாரகாவிற்குத் திரும்பினர். ஸ்ரீ கிருஷ்ணரும் மற்ற அனைத்து யாதவர்களும் துவாரகாபுரிப் பட்டிணத்தை 36 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மகாமுனி கன்வர் மற்றும் கௌரவர்களின் தாயான காந்தாரி ஆகியோர் கொடுத்த சாபங்களின் விளைவாக, ஒரு நாள் துவாரகையில் வாழ்ந்து வந்த யாதவர்கள் சில கெட்ட சகுனங்களைக் உணர்ந்தனர், துவாரகையின் மன்னரான ஸ்ரீகிருஷ்ணரின் உத்தரவின் பேரில் துவாரவதியை விட்டு அவர்கள் யாத்திரை மேற்கொண்டனர். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பிற யாதவர்களான விருஷ்ணிகள், போஜர்கள், அந்தகர்கள் உட்பட அனைவரும் கடற்கரையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர், ஸ்ரீ கிருஷ்ணரை தவிர்த்து அனைத்து யாதவர்களும் மதுப்பழக்கங்களின் மூலம் அதிக போதையில் சீர்க்கெட்டிருந்தனர், மூன்று மூலைகளிலும் இருந்து தீப்பாறைகள் விரைந்து வெளிவந்து தாக்கின. முனிவரால் முன்னறிவிக்கப்பட்டபடி , துவாரகை மாநகரம் சமுத்திரத்தில் மூழ்கி அழிந்தது.

துவாரகை சமுத்திரத்தில் மூழ்குதல்

குறிப்பு:-

எர்ரகட்டபாடின் மன்னரான காட்டமராஜுவும், காகத்திய பேரரசர் பிரதாபரும் (ருத்ரதேவர்) சமக்காலத்தவர்கள் ஆவர். அந்த ருத்ரதேவரின் பேரனான கணபதி தேவரின் (ருத்ராம்பாளின் தந்தை) ஆட்சிக்காலத்தில் வடிக்கப்பட்டதே மேலே காணக்கிடைக்கும் இக்கல்வெட்டாகும். 

Comments

Popular posts from this blog

எட்டயபுரம் வரலாறு

ஊமைத்துரை சிறை மீட்பு, பாளையங்கோட்டை சிறை தகர்ப்பு

தேவகிரி யாதவர்கள் (The Yadavas of Devagiri)