Harihara city Sila Sasana AD. 1147 (Paandiyas, kuntalas, and Chalukkiyas were belong to Yadavas clan)

ஹரிஹர நகர் சிலாசாசனம் கி.பி.1147 :
---------------------------------------------------------------

அதன் தெற்கே பாரத வர்ஷம் இருந்தது, அதன் நடுவில் #குந்தல தேசம் இருந்தது, பூமியின் பெண்மணிகள் (குந்தலை) போல ஒளிரும், அந்த குந்தல தேசத்தின் ஆட்சியாளர்கள், வீரத்தில் நிகரற்ற, மகத்தான செல்வத்தை உடையவர்கள்.  நல்ல தரமான, #சாளுக்கிய மன்னர்கள் அந்த நிலத்திற்கு மணமகன்களாக இருந்தனர்.  மேற்படி யாருடைய தோற்றத்தின் வழி மரபு பின்வருமாறு இருந்தது.

#விஷ்ணுவின் நாபியில் இருந்து தோன்றிய தாமரையிலிருந்து #பிரம்ம_தேவர் பிறந்தார், அவருடைய இதயத் தாமரையிலிருந்து ரிஷிகளுள் சிறந்தவரான #அத்ரி_மாமுனிவர் தோன்றினார். அவரது கண்களின் பிரகாசமிக்க ஒளியிலிருந்து, 

#லட்சுமி தேவியின் நெற்றியில் ஆபரணமாக, பிரகாசமிக்க கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட #சந்திர_தேவன் பிறந்தார். 

நீரிலிருந்து, பிரம்மாவின் நாபியிலிருந்து, முனிவரின் கண்ணிலிருந்து என மூன்று விதங்களில் பிறந்தாலும், அவர் இயல்பில் "#அத்ரிஜனனா" என்று அழைக்கப்படுகிறார். 

இத்தகைய #சந்திர வம்சத்தில் #யது பிறந்தார், அவர் மூலம் #யாதவ அரச இனம் பரந்த மகிமையுடன் அறியப்படுகிறது. யதுவின் பிறப்பால் சந்திர குலம் தூய்மைப்பெற்றது.

பின்னர் #யாதவ_குலத்து ஆபரணமாக #ஆதித்ய_தேவன் பிறந்தார். 

அவரது கையிலிருந்து #பாண்டியன் பிறந்தான், அந்த பாண்டிய ராஜனுக்கு #சேதிராஜன் என்ற மகன் பிறந்தான்.

அந்த சேதி ராஜனிலிருந்து வந்த மன்னர்கள் எல்லாவற்றிற்கும் மேலான தங்களின் வலிமைமிக்க செயல்களால் பிரபலமானவர்கள்.

யாதவர்களின் ஆபரணமாக விளங்கிய சேதிராஜனின் மகன் #தம்பலா, அவரது மகன் #வீரபாண்டியன். 

இந்த யாதவ வம்சாவளியைச் சேர்ந்த வீரபாண்டியனுக்கு, #தம்பாலன் என்கிற மகனும், அவருக்கு அதிர்ஷ்டத்தின் பிள்ளையாக #கவேல_நிருபாலன் மகனும் பிறந்தார். 

அந்த மன்னனுக்கு இந்திரனைப் போன்ற பெருந்தலைவனாக, அன்புக்குரிய வேந்தனாக #பாண்டிய_மன்னன் பிறந்தான். அவன் உலகம் முழுவதற்கும் அரசு செலுத்தி பெரும் புகழ் பெற்றான். 

இந்திரன் ஸ்வர்கத்தை ஆள்வது போல் அவன் தனது சக்தி வாய்ந்த கரங்களால் உலகம் முழுவதையும் ஆண்டான். அவரது மனைவி சாவலாதேவி, உயர்ந்த குணங்களில் அரசனுக்கு இணையானவள்.

-

Comments

Popular posts from this blog

அனுப்பர் வரலாறு