அகோபிலேஷ்வஸ்ரப் பெருமாள் கோவில், ஆயக்குடி
அகோபிலேஸ்வரப் பெருமாள் திருக்கோயில் நிர்மாணம் ஆயக்குடி . திருத்தல ( ம் ) வரலாறு - 1. விஜய நகரப் பேரரசை ஆண்டு வந்த
மன்னர் அம்பதேவராயர் அவர்கள் தனக்கு உதவியாக இருக்க , ஆனைக்குந்தி தேசத்தில் பெனுகொன்டாவிலுள்ள " அஹோபிலம் ‘ என்ற ஊரில் வாழ்ந்து வந்த
பெரிய ஓபளக் கொண்டம நாயக்கர் அவர்களுக்கு பல விருதுகளைச் கொடுத்து அப்பகுதியினை அரசாட்சி நடத்திட நியமனம் செய்யப்பட்டார் . 2. பாண்டிய , சோழமன்னர்களுக்கிடையே ஏற்பட்ட போரின் போது பாண்டியமன்னருக்கு உதவியாகப் படைகளை நடத்திச்செல்வதற்கு மதுரையை ஆட்சி செய்த
விஸ்வநாத நாயக்கர் மன்னரால் அனுப்பப்பட்டு போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடியுள்ளார் . 3 . போரில் வெற்றியடைய உதவி செய்ததைப் பாராட்டி மதுரையை ஆண்டு வந்த விஸ்வநாத நாயக்கர் பெரிய ஓபளக் கொண்டம நாயக்கர் அவர்களுக்கு ( நன்றியாக )
வராகிரிச் சாரலில் பழனி திருத்தலத்தைச் சுற்றிலுமுள்ள நிலங்களைக்கொடுத்து தனக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் .காடு . மலை , வனாந்தரம் மிகுந்த வராகமலைச்சாரலின் மிருகங்களுக்குப் பயந்து ஆயர்குல மக்களில் சிலர் மட்டும் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்க்கை ( பிழைப்பு ) நடத்தி வந்ததைப் பார்த்து . அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்கள் பெயரிலேயே இடத்திற்கு ( தலத்திற்கு ) *
ஆயர்புரி ' ( இன்றைய ஆயக்குடி ) என பெயர் வைத்து பெரிய ஓபளக் கொண்டம நாயக்கர் துரைத் தலம் ( அரசாட்சி ) செய்து வந்துள்ளார் . 5. சாலி வாகன சகாப்தம் , 132 | கலியுக சகாப்தம் 4500 , ஆங்கிலம் ( 399 தமிழ் ஸ்ரீசக வருடம் , சித்திரை மாதம் முதல் சாலி வாகன சகாப்தம் 1352 ஆங்கிலம்
1429 தமிழ் சோபகிருது வருடம் சித்திரை மாதம் சுக்கில , துரதிகை ஆதித்த வாரம் வரை 31 வருடங்கள் இந்த பொருட்டு ஆயர்புரியை ஆண்டு வந்த பெரிய ஓபளக் கொண்டம நாயக்கர் அய்யன் அவர்களால் இந் திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது .
Comments
Post a Comment