ஸ்ரீ ஒன்னம்மாள் சபதம். Saturday, 14 February 2015 அனுப்பர் வரலாறு. வணக்கம்!. வரலாறு: கன்னட மொழி பேசுவோர் மற்றும், பேசுவோர் அல்லாத கவுண்டர் இனத்தவர்களுக்கும், தெலுங்கு மொழி பேசுவோர்களான நாயுடு, ரெட்டியார் இனத்தவர்களுக்கும் தலைமை பீடமாக இருந்தவர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர். இவரின் நேரடி வம்சாவழியினர் சிறுவாலை சம்ஸ்தானத்து அரண்மனையார். அரண்மனையார், கம்பளி, குருக்கள், பெருமாள் கோவில் பூசாரி, ஆவுக்காரன், தின்னப்பெத்தன். மானகாரன், கட்டியக்காரன் ஆகிய எட்டு வகை அதிகாரிகளின் துணை கொண்டு, தென்னாட்டை நீதியாக தெய்வீக சக்தியுடன் ஆட்சி செய்தார்கள். அனுப்பக்கவுண்டர்கள் எங்கனம் விஜய நகர பேரரசின் வம்சா வழியினராக இந்நாட்டை ஆட்சி செய்தார்கள் என்ற வரலாறு, சிறுவாலை அரண்மனையாரிடமிருந்த ஓலைச்சுவடிகளிலிருந்து காணப்படுகிறது.அவ்வரலாற்றைக் காண்போம். கம்பளத்தார்களின் தகப்பனார் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்றும், நாகர் இனத்தை சேர்ந்த பத்திராட்சி, கமலாட்சிஆகியோர் வளர்ப்புத் தாய்கள் என்றும் பட்டயங்கள் கூறுகின்றன.அதாவது ஸ்ரீ கிருஷ்ணபகவான் மார்பில் உள்ள அல்லி மலர் வடிவமான மறுவிலிருந்து அனுப்பர் குல முதல் கொழுந்துகளா...
Comments
Post a Comment