தேவகிரி யாதவ படையெடுப்பில் சேலம் வந்த கொல்லவாருகள்

தேவகிரி யாதவ படையெடுப்பில் சேலம் வந்த கொல்லவாருகள்:
--------------------------------------------------------------------------

பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டில் #தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆந்திராவின் பகுதிகளை ஆண்ட #தேவகிரி_யாதவர்களின் ராஜ்ஜியத்து மக்கள் இந்த #கொல்லவார்கள் என்று நம்பப்படுகிறது. 

இந்த யாதவர்கள் அக்காலத்தில் தங்களுக்கு சமமான சக்தி வாய்ந்த ஹொய்சலர்களுக்கு விரோதமாக இருந்தனர். 

தேவகிரி யாதவர்களில் சக்தி வாய்ந்த அரசனான #சிங்கண்ண_தேவர் தெற்கில் ஹொய்சலாக்கள் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்தின் அவரது ஆளுநரான #விக்கண்ண_தேவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாலர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளிலிருந்து ஹொய்சாலர்களை விரட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போதை சேலம் மாவட்ட (#சேலம்+#கிருஷ்ணகிரி+#தருமபுரி+#நாமக்கல் மாவட்டங்கள்) கொல்லவார் விக்கண்ண தேவருவுடன் வந்த படைப்பிரிவினர் என்றும் போர்வீரர்கள் என்றும் என்று நம்பப்படுகிறது. 
-

இந்த சேலம் மாவட்ட கொல்லவார்களில் மிகக் குறிப்பாக 9 கொல்லவாருகள் இருந்துளாளனர் அவர்கள்

1, #பாப்ப_கொல்லவார்

2, #எர்ர_கொல்லவார்

3, #பொக்கிஷ_கொல்லவார்

4, #தொட்டி_கொல்லவார்

5, #கோண_கொல்லவார்

6, #எட_கொல்லவார்

7, #மொந்தி_கொல்லவார்

8, #மந்த_கொல்லவார்

9, #முக்கது_கொல்லவார்

-

Comments

Popular posts from this blog

அனுப்பர் வரலாறு